அடுத்தமாத இறுதிக்குள் சென்னையில் மட்டும் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்- மருத்துவ குழு

 

அடுத்தமாத இறுதிக்குள் சென்னையில் மட்டும் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்- மருத்துவ குழு

ஜூன் மாத இறுதிக்குள் சென்னையில் மட்டும் 2 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர் என தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் கலந்து கொண்டனர். பரிசோதனைகளை அதிகப்படுத்தி, கொரோனா தொற்றுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிப்பதே கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் ஜூன் மாத இறுதிக்குள் சென்னையில் மட்டும் 2 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர் என்றும், ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பர் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்தமாத இறுதிக்குள் சென்னையில் மட்டும் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்- மருத்துவ குழு

எந்த சூழ்நிலையிலும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்றும் நிபுணர் குழு அறிவுறுத்தியதாக தெரிகிறது. மே 19 ஆம் தேதி முதல், சென்னையில் நாள் ஒன்றுக்கு 550 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதிகபட்சமாக மே 23 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்ததாகவும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரப்தீப் கவுர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் மே மாத மத்தியில் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.