கட்சி பெயரை குறிப்பிடாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் சார்பில் போஸ்டர்… கோவையில் பரபரப்பு!

 

கட்சி பெயரை குறிப்பிடாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் சார்பில் போஸ்டர்… கோவையில் பரபரப்பு!

கோவை

அண்ணா பிறந்தநாளையொட்டி, கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி ஒட்டியுள்ள போஸ்டரில் கட்சியின் பெயரை குறிப்பிடப்படாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்ட அதிமுகவின் மூத்த உறுப்பினரான செ.ம.வேலுசாமி, எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் இருந்தே அதிமுகவில் இருப்பவர். இவர் அமைச்சர், கோவை மாநகராட்சி மேயர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். இந்த நிலையில், சமீப காலமாக இவருக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில், அண்ணாவின் 113-வது பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் முழுவதும் செ.ம.வேலுசாமி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

கட்சி பெயரை குறிப்பிடாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் சார்பில் போஸ்டர்… கோவையில் பரபரப்பு!

அதில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது சிறிய அளவிலான உருவ படமும், அதிமுக கட்சியின் பெயரை குறிப்பிடாமலும் உள்ளது. மேலும், செ.ம.வேலுசாமியின் பெயருக்கு முன்னாள் அமைச்சர், மேயர் என்று மட்டும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டு உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும், அந்த சுவரொட்டியில் அண்ணாவின் கொள்கைகளை தன்னலமில்லமால் வழிநடத்துபவர், வழி நடப்போம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சூழலில், கோவை மாவட்ட அதிமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும், செ.ம.வேலுசாமி பங்கேற்கவில்லை. அதிமுகவின் மூத்த நிர்வாகியான செ.ம.வேலுசாமியின் பெயரில், அதிமுக பெயரை தவிர்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.