ரீவா சூரியமின்சக்தி திட்டம்தான் ஆசியாவில் பெரியது என்ற மோடி… பொய் என்று விமர்சித்த ராகுல் காந்தி!

 

ரீவா சூரியமின்சக்தி திட்டம்தான் ஆசியாவில் பெரியது என்ற மோடி… பொய் என்று விமர்சித்த ராகுல் காந்தி!

மத்தியப் பிரதேச மாநிலம் ரீவாவில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்சக்தி திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் இது என்று குறிப்பிட்டிருந்தார். இது பொய்யான தகவல் என்று ராகுல் காந்தி விமர்சித்திருப்பது வைரல் ஆகி வருகிறது.

ரீவா சூரியமின்சக்தி திட்டம்தான் ஆசியாவில் பெரியது என்ற மோடி… பொய் என்று விமர்சித்த ராகுல் காந்தி!மத்திய பிரதேச மாநிலத்தில் 750 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 500 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அப்போது பேசிய அவர், ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் திட்டம் இது என்று குறிப்பிட்டார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உலகத்திலேயே இதுதான் மிகப்பெரியது என்று ட்வீட் செய்திருந்தார்.

ரீவா சூரியமின்சக்தி திட்டம்தான் ஆசியாவில் பெரியது என்ற மோடி… பொய் என்று விமர்சித்த ராகுல் காந்தி!கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவக்குமார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பவகாடா பார்க்கில் 2000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் திட்டத்தை நாங்கள் திறந்தோம். அப்படி இருக்கும்போது 750 பெரியதா, 2000ம் பெரியதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் கர்நாடக சூரிய மின்சக்தி திட்டம்தான் மிகப்பெரிய மின்திட்டம் என்பதை நிரூபிக்கத் தயார் என்றும் சவால் விட்டிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்வீடில் “ரீவா நகரம் வெள்ளைப்புலிகளுக்கும், நர்மதை நதிக்கும் மட்டுமே அடையாளமாக இருந்த நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் உள்ள நகராகவும் அடையாளம் பெறும்” என்று கூறியிருந்தது.

http://


இந்த ட்வீட்டை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி “பொய்” எனக் குறிப்பிட்டு தன்னுடைய பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார். பலரும் இதை ரீட்வீட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் ராகுல்காந்தி என்ன சொன்னாலும் அதை விமர்சித்து பதிவிடுவது என்று உள்ள பா.ஜ.க தொண்டர்கள் ராகுல் காந்தியை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.