“கொரானாவை மறந்து ,கல்யாண விருந்து” -மாஸ்க் இல்லாமல் ,இடைவெளி இல்லாமல்- ஊரை கூட்டி நடக்கும் திருமணங்கள் ..

ஜார்கன்ட் மாநிலம் ஜாம்ஷட்பூரில் திங்களன்று நடந்த ஒரு திருமணத்தில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாஸ்க் இல்லாமல் ,சமூக இடைவெளி இல்லாமல் விருந்து சாப்பிட்டனர் .

இதை பற்றி அந்த பகுதி போலீசில் புகாரளிக்கப்பட்டது .அப்போது அந்த பகுதி காவல் அதிகாரி திருமணத்திற்கு வருவோரை கண்காணிப்பது எங்களின் வேலையில்லை என்று கூறியுள்ளார்
அதே போல சோனாரி பகுதியில நடைபெற்ற ஒரு திருமணத்திலும் இதே போல 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள் ,அதையும் காவல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையாம் .

திங்களன்று, மாநில தலைநகரின் பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் 10 உறுப்பினர்களுக்கு கொரானா பாசிட்டிவ் என முடிவு வந்தது . கொரானா எப்படி அவர்களுக்கு பரவியது என ஆராய்ந்ததில் ஜூலை 22 அன்று நடந்த தங்கள் மகனின் திருமணத்திற்காக சில உறவினர்களுடன் பீகாரில் உள்ள பக்ஸருக்குச் சென்றிருந்ததாக குடும்பத்தின் பயண வரலாறு வெளிப்படுத்தியது.

அங்கிருந்து அவர்கள் ஜூலை 4 ஆம் தேதி திரும்பி வந்தனர். இந்த தொற்று முதலில் குடும்பத்தின் தலைவருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மணமகள் உள்ளிட்ட பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் பாசிட்டிவ் முடிவு வந்தது . சமீபத்தில், சோனாரி பகுதியில் உள்ள கொரானா சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலருக்கும் பீகாரில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால் கொரானா பரவியது இதே நிலை நீடித்தால் திருமண மண்டபங்கள் கொரானாவை பரப்பும் மையங்களாக மாறும் என்பதில் ஐயமில்லை .

Most Popular

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக தமிழகமும், மகாராஷ்டிராவுமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து...

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...