”டைப் செய்தால் பின்புறம் விளக்கு எரியும் வயர்லெஸ் கீபோர்ட்” – லாஜிடெக் அறிமுகம்!

 

”டைப் செய்தால் பின்புறம் விளக்கு எரியும் வயர்லெஸ் கீபோர்ட்” – லாஜிடெக் அறிமுகம்!

டைப்பிங் செய்யும் போது மட்டும் விளக்கொளியில் மின்னும் புதுமையான வயர்லெஸ் கீபோர்டை லாஜிடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

கீபோர்ட் உள்ளிட்ட கம்ப்யூட்டர் உபகரணங்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்து வரும் லாஜிடெக், எம்எக்ஸ் கீஸ் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் கீபோர்டை அறிமுகப்படுத்தி உள்ளது. பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு இது சற்றே காஸ்ட்லி சமாச்சாரம் தான் என்பது ஒரு புறமிருந்தாலும் இதில் உள்ள எண்ணற்ற சிறப்பம்சங்கள் இதை கவனிக்க வைக்கிறது.

”டைப் செய்தால் பின்புறம் விளக்கு எரியும் வயர்லெஸ் கீபோர்ட்” – லாஜிடெக் அறிமுகம்!

இந்த வயர்லெஸ் கீபோர்டை, அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் பயன்படுத்த முடியும் என்பது இதன் முதல் சிறப்பு. அதேப்போல, டைப்பிங் செய்வதற்கு ஏற்ற வகையில் கீபேட் வடிவமைப்பு, புளூடூத் மற்றும் யுஎஸ்பி ரீசவர் என இரண்டு வகைகளில் பயன்படுத்தும் வசதி, என வெளிவந்துள்ளது.

மேலும் இந்த கீபோர்டில் பின்புறம் பிராக்ஸ்மிட்டி சென்சாருடன் கூடிய எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், டைப்பிங் செய்ய கைகளை கொண்டு வந்தால், பின்பக்க விளக்குகள் எரியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது கீபோர்டு அருகே கைகளில் அசைவு இல்லாத போது, அதன் விளக்குகள் எரியாது. இதன் மூலம் பேட்டரியின் திறனும் ஆயுளும் கூடும்.

”டைப் செய்தால் பின்புறம் விளக்கு எரியும் வயர்லெஸ் கீபோர்ட்” – லாஜிடெக் அறிமுகம்!

இந்த கீபோர்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என லாஜிடெக் கூறுகிறது. அதே சமயம், இந்த கீபோர்டின் பின்பக்க விளக்கை அணைத்து வைத்து பயன்படுத்தினால் 5 மாதங்களுக்கு சார்ஜ் போடவே தேவையில்லை என்கிறது லாஜிடெக். மேலும் டைப் சி கேபிள் மூலமாக சார்ஜ் செய்யும் வசதியை அளித்துள்ள அந்நிறுவனம், விண்டோஸ் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம், மற்றும் லினக்ஸ் மற்றும் ஆண்டிராய்ட் 6 மற்றும் அதற்கு அடுத்து வந்த இயங்குதளங்களில் இந்த கீபோர்டை இணைத்து பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. இதன் விலை 12,995 ரூபாய் ஆகும்.

  • எஸ். முத்துக்குமார்