மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு

 

மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு

புதுச்சேரியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தன.

மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 வாரத்தில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பு மீண்டும் தலைதூக்குவதால் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துவருகின்றன. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட அம்மாநில கலால்துறை துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுபானக்கடைகள், சாராயக் கடைகள், கள்ளுக்கடைகளை மூட வேண்டுமென புதுச்சேரி மாநில கலால்துறை தெரிவித்துள்ளது.