‘உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவீர்களா?’ சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது!

‘உங்கள் பிள்ளைகளை  பள்ளிக்கு அனுப்புவீர்களா?’ சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் தொடங்கியது.

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதுகுறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டத்தை அரசு இன்று நடத்துகிறது.

‘உங்கள் பிள்ளைகளை  பள்ளிக்கு அனுப்புவீர்களா?’ சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது!

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது. தனிமனித இடைவெளியுடன் சென்னையில் உள்ள பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது, 9 ,10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறுகின்றனர். கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் பள்ளிகள் திறப்பு பற்றி கடிதம் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பள்ளி திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும்.

‘உங்கள் பிள்ளைகளை  பள்ளிக்கு அனுப்புவீர்களா?’ சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது!

சென்னையில் சில பள்ளிகளில் கேள்விகள் அச்சிடப்பட்ட காகிதத்தில் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படுகிறது. உங்கள் பிள்ளையை வகுப்புக்கு அனுப்புவீர்களா? போன்ற கேள்விகள் அச்சிடப்பட்டு பெற்றோருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதில் ஆம், இல்லை, கருத்து சொல்ல விருப்பமில்லை போன்றவற்றில் ஒன்றை பெற்றோர் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.