“தியேட்டர் திறந்தா கொசுவும் ,மூட்டைப்பூச்சியும்தான் படம் பார்க்கும்” -80%பேர் தியேட்டருக்கு போக விருப்பமில்லையாம் .-ஆய்வில் அதிர்ச்சி

“தியேட்டர் திறந்தா கொசுவும் ,மூட்டைப்பூச்சியும்தான் படம் பார்க்கும்” -80%பேர் தியேட்டருக்கு போக விருப்பமில்லையாம் .-ஆய்வில் அதிர்ச்சி

உலகம் முழுவதும் கொரானாவைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் ஒரு வேலை தியேட்டர்கள் திறந்தால் அங்கு படம் பார்க்க செல்வீர்களா என்று ஆகஸ்ட் மாதம் லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்பின் மூலம் இந்தியாவின் பல மாவட்டங்களில் சர்வே எடுக்கப்பட்டது .அதில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு மேல் படம் பார்க்க தியேட்டருக்கு செல்லமாட்டோமென்றும் ,வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே படம் பார்க்க போவதாகவும் ,14 சதவீதம் பேர் எப்படியிருந்தாலும் தியேட்டருக்கு போக மாட்டோமென்றும் கூறியுள்ளார்கள் .இதனால் தியேட்டர் திறந்தாலும் கடும் நஷ்டத்தைத்தான் அது சந்திக்கும் .

“தியேட்டர் திறந்தா கொசுவும் ,மூட்டைப்பூச்சியும்தான் படம் பார்க்கும்” -80%பேர் தியேட்டருக்கு போக விருப்பமில்லையாம் .-ஆய்வில் அதிர்ச்சி

மேலும் அவர்களிடம் ஸ்கூல் திறந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவீர்களா என்ற கேட்ட போது 62 சதவீதம் பேர் அனுப்பமாட்டோமென்று கூறினார் .32 சதவீதம் பேர் மட்டுமே அனுப்ப தயாராக உள்ளதாக கூறினார்கள்
அவர்களிடம் ரயில் இயக்கப்பட்டால் போவீர்களா என்று கேட்டபோது அதிலும் 60சதவீதம் பேர் ரயிலில் போகமாட்டோமென்றும் ,மீதி 30சதவீதம் பேர் மட்டுமே ரயில் பயணம் செய்வோமென்று கூறினார்கள் .இதனால் செப்டம்பர் மாதம் ரயில் ,தியேட்டர் ,பள்ளிகள் திறந்தாலும் பெரும்பான்மையான மக்கள் கொரானாவுக்கு பயந்து அதை பயன்படுத்துவது மிக குறைவு என்பது தெளிவாகிறது .

“தியேட்டர் திறந்தா கொசுவும் ,மூட்டைப்பூச்சியும்தான் படம் பார்க்கும்” -80%பேர் தியேட்டருக்கு போக விருப்பமில்லையாம் .-ஆய்வில் அதிர்ச்சி