வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே மூலம் பணப்பட்டுவாடா?! தேர்தல் ஆணையம் அதிரடி

 

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே மூலம் பணப்பட்டுவாடா?! தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை அதிகாரிகளை பறிமுதல் செய்தனர். ஆனால் அதனையும் தாண்டி தொழில்நுட்பங்கள் மூலம் பணம் பட்டுவாடா நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக வாக்காளர்களின் செல்போன் எண்கள் பெறப்பட்டுவருகிறது.

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே மூலம் பணப்பட்டுவாடா?! தேர்தல் ஆணையம் அதிரடி

இந்நிலையில் இதுபோன்ற பணப்பரிமாற்றங்களை தடுப்பதற்காக வங்கிகளின் மூலம் பணம் பரிவர்த்தனையை கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை தடுக்க தனி குழுவை நியமித்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பண விநியோகம் குறித்து கட்சி அலுவலகங்களை கண்காணிக்கவும் ரோந்து போலீஸாருக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.