திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகலா?

 

திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகலா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. ரொம்பவும் வலுவான கூட்டணியாகவும் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் கூட்டணியாகும் கருதப்படுவது திமுக கூட்டணியே.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகள் அனைத்துமே பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து மாபெரும் வெற்றியைப் பெற்றன. 39 தொகுதிகளில் போட்டியிட்ட 38 தொகுதிகளில் அதாவது ஒரே ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபரிதமான வெற்றி பெற்றது. அந்த வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் பெறவேண்டுமென்று இந்த கூட்டணியை சிந்தாமல் சிதறாமல் அப்படியே கொண்டு சென்று கொண்டிருக்கிறார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.

திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகலா?

ஆனால் சமீப காலமாக கூட்டணியில் சில சிக்கல்கள் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியை, திமுக கூட்டணி கொண்டு வரவேண்டும் என்று திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் விரும்புகிறார்கள் என்றும், அதற்கான பணிகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், பாமக பெரிய அளவில் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் சென்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி அன்புமணி ராமதாஸ்க்கு கிடைத்தது. அது அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகளே கிடைத்தது. அதனால் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து அவர்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகலா?

மேலும் வன்னியர் உள் இட ஒதுக்கீடு சம்மந்தமாக அதிமுகவோடு பேசி வருகிறது பாமக. அதில் ஏதேனும் ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டு விட்டால் அங்கேயே நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதிமுகவும் பாமகவை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ஏனெனில் அதிமுகவிற்கு அடுத்து பெரிய கட்சி என்றால் பாமக தான். இதெல்லாம் ஒருபக்கம் நடந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியை எப்படியாவது திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகளுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தொடக்கத்திலிருந்தே சொல்லிவரும் விஷயம் ஒன்றுதான். மதவாத மற்றும் சாதியவாத கட்சிகள் இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது. மதவாத சக்தியாக அவர் பாஜகவில் ஜாதிவாத கட்சியாக பா.ம.கவையும் கணிக்கிறார்.

திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகலா?

ஒருவேளை திமுக கூட்டணிக்கு வந்தால் என்னவாகும் என்று திருமாவளவனிடம் கேள்வி கேட்டபோது ’திமுக தங்களுக்கு வெற்றி வாய்ப்புக்காக பாமக உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிப்பது தவறல்ல… ஆனால், பாமக இருக்கும் கூட்டணிக்குள் நிச்சயமாக விசிக இருக்காது’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.

மநு ஸ்மிருதி குறித்து திருமாவளவனின் பேச்சு சர்ச்சைக்குள்ளான போது அதை வைத்து திமுக கூட்டணியை உடைக்க முயற்சி செய்தார்கள் சிலர். ‘இந்த பேச்சால் திமுக கூட்டணிக்கு சிக்கல் என்றால் விடுதலை சிறுத்தைகள் இந்த தேர்தலில் போட்டியிடாமல் கூட திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கும்’ என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார். சமீபத்தில் கூட உதயசூரியன் சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். ஏனெனில் கூட்டணியின் வெற்றி வெற்றிதான் முக்கியம் என்றும் பேசியிருந்தார்.

திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகலா?

விசிக தரப்பில் இவ்வளவு இறங்கி வந்து திமுக கூட்டணிக்காக நிற்கும்போது, திமுக ஏன் பாமக வை நோக்கி செல்ல வேண்டும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. பாமக வந்தால் திமுக கூட்டணிக்கு இன்னும் பலம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் தொகுதி பங்கீடு மற்ற கட்சிகளின் அரவணைப்பு இந்த விஷயங்களில் சிக்கல் ஏற்படும் என்றும் திமுகவுக்கு தெரியாதா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பாமக உள்ளே வரும் பட்சத்தில் முதலில் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறிவிடும். இது கடந்த மூன்று ஆண்டுகளாக திமுகவுடன் பயணித்து வரும் வீசிய பெரும் பின்னடைவு. விசிக விலகுவது வட தமிழ்நாட்டில் திமுகவுக்கும் தேர்தலில் பின்னடைவை கொடுக்கும் என்றே சொல்கிறார்கள்.