“அவங்க ஓகே சொன்னா உதயநிதிக்கு சீட் கொடுக்க ரெடி” – ஸ்டாலின் ஷாக் பதில்!

 

“அவங்க ஓகே சொன்னா உதயநிதிக்கு சீட் கொடுக்க ரெடி” – ஸ்டாலின் ஷாக் பதில்!

திமுகவில் வாரிசு அரசியல் என்ற புகார் ஸ்டாலின் மேல் இருந்தாலும் அவருடைய களப்பணியும் 50 வருட அரசியல் அனுபவமும் அந்தக் கறையை அகற்றியேவந்தன. திமுக தலைவர்கள் எதிர்வினையாற்றவும் உதவின. ஆனால் உதயநிதியின் கதையே வேறு. களப்பணி செய்யாமல் கட்சிக்குள் என்ன வேகத்தில் உதயநிதி நுழைந்தாரா அதே வேகத்தில் இளைஞரணிச் செயலாளராகவும் உயர்ந்தார். இது உட்கட்சிக்குள்ளாகவே அதிருப்தியை ஏற்படுத்தியது. தலைமையின் காதுக்கு எட்டாதவாறு புலம்பி தவித்தனர். குறிப்பாக கட்சியில் அவ்வளவு சீனியர்கள் இருக்கும்போது ஏன் அவசர கதியில் உதயநிதிக்குப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற கலகக் குரலும் எழாமல் இல்லை.

“அவங்க ஓகே சொன்னா உதயநிதிக்கு சீட் கொடுக்க ரெடி” – ஸ்டாலின் ஷாக் பதில்!

இது உள் விவகாரம். வெளியே திமுகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய அதிமுக, பாஜக தலைவர்கள் கைக்கொண்டிருக்கும் முக்கிய ஆயுதமே வாரிசு அரசியல் தான். ஸ்டாலின் உதயநிதியை முதல்வராக்கவே அக்கறை கொள்கிறார் என்ற அமித் ஷாவின் பேச்சே அதற்கான டிரெய்லர். அதிமுக தலைவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அதிமுகவிலும் வாரிசு அரசியல் இல்லையா? இருக்கிறது திமுகவை விட அதிகமாகவே இருக்கிறது. ஏன் பாஜகவிலும் கூட இருக்கிறது. ஆனால் திமுக என வரும்போது தலைமை என்ற வஸ்து ஒன்றிணையும்போது தான் பிரச்சினை பூதாகரமாக வெடிக்கிறது. எதிர்க்கட்சிகள் தாக்குவதற்கும் வசதியாகப் போய்விடுகிறது.

“அவங்க ஓகே சொன்னா உதயநிதிக்கு சீட் கொடுக்க ரெடி” – ஸ்டாலின் ஷாக் பதில்!

வாரிசு அரசியலைக் கொண்டு திமுக மீது ஒரு ஒவ்வாமையை உருவாக்குகின்றனர். வாரிசு அரசியல் குறித்துப் பேசும் இவர்கள் அக்கட்சி செய்த தீமைகளை எடுத்துரைப்பதில் நேரம் செலவிட தயாரகவில்லை. மக்களிடம் அதெல்லாம் எடுபடாது என்ற எண்ணம் இருப்பதால் தான் வாரிசு அரசியல் ஆயுதத்தைக் கையெலிடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்த நெருப்பில் தூபம் போட்டது போல உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவைக் கொடுத்தார்.

“அவங்க ஓகே சொன்னா உதயநிதிக்கு சீட் கொடுக்க ரெடி” – ஸ்டாலின் ஷாக் பதில்!

இதற்கு கட்சிக்குள்ளேயே கலவரம் வெடித்திருப்பதாலும், எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகம் இருப்பதாலும் உதயநிதியே ஸ்டாலினிடம் சென்று தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியதாக ஒரு தகவல் உலா வந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்டாலினின் பேட்டி அமைந்துள்ளது. சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு ஸ்டாலின் பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் உதயநிதியின் அரசியல் பயணம் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது.

“அவங்க ஓகே சொன்னா உதயநிதிக்கு சீட் கொடுக்க ரெடி” – ஸ்டாலின் ஷாக் பதில்!

அதற்குப் பதிலளித்த அவர், “திமுக எப்போதுமே கடின உழைப்பையும் கட்சிக்குத் தொண்டன் காட்டும் நேர்மையையும் மதிக்கும். நான் இன்றைக்கு கட்சியில் இருக்கும் நிலையை எட்ட 50 ஆண்டு காலம் கடினமாக உழைத்திருக்கிறேன். மற்ற அனைவரைப் போல உதயநிதியும் களத்தில் தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும். அவரது அரசியல் பயண முன்னேற்றம் அவருடைய கடின உழைப்பாலும், தமிழக மக்களின் மனங்களில் அவர் என்னவாக இடம்பெறுகிறார் என்பதைப் பொறுத்தும் அமையும்” என சூசகமாகக் கூறியிருக்கிறார்.