மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?

 

மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?

கொளத்தூர், எடப்பாடி வரிசையில் கோவில்பட்டி தொகுதியும் இம்முறை கவனம் பெறுகிறது. காரணத்தைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆர்கே நகரில் சுயேச்சையாக நின்று பேரியக்கமான திமுகவையே டெபாசிட் இழக்கச் செய்தவர், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்ற எழுதப்படாத விதியை மாற்றியெழுதியவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஆனார் டிடிவி தினகரன். அவர் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதி கோவில்பட்டி.

மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?

தினகரனின் பூர்வீகமான மன்னார்குடி பக்கம் தொகுதிகளில் போட்டியிடுவார் அல்லது அவருக்குப் பேராதரவு இருக்கும் ஆண்டிப்பட்டி, கம்பம் தொகுதிகளில் போட்டியிடுவார் என்றே அனைவரும் கணித்தனர். ஆனால் அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்து ட்விஸ்ட் வைத்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு மட்டும் ஸ்பெஷலாக ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தார்.

மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?

கோவில்பட்டியை தேர்ந்தெடுக்க இத்தனை காரணங்களா?

ஒருபுறம் ஓபிஎஸ், மறுபுறம் தங்க தமிழ்ச்செல்வன் எனும் பெரிய தலைக்கட்டுகள் ஆதிக்கம் செலுத்துவதால் தேனி மாவட்ட தொகுதிகளில் கடுமையாகப் போராட வேண்டும். அவ்வளவு போராட்டமெல்லாம் வேண்டாம் சிறிய தொகுதியான கோவில்பட்டியில் போட்டியிடலாம் என்பது எளிதான முதல் காரணம். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினரின் பெரும்பான்மையான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலைக்கு விழும். அந்த வாக்குகளைக் கவர தென் மாவட்டங்களில் ஒரு அதிர்வை ஏற்படுத்த வேண்டும்.

மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?

அதற்கு மையப்பகுதியில் போட்டியிட வேண்டும். ஒரு முதல்வர் வேட்பாளர் மையப்பகுதியில் போட்டியிட்டால் அதன் அதிர்வுகள் எட்டுத்திக்கும் விரியும் என்பது அரசியல் யுக்தி. இது இரண்டாம் காரணம். 2019 உள்ளாட்சி தேர்தல் அனைவருக்கும் நியாபகம் இருக்கலாம். அதிமுகவின் அடிப்படையே ஆட்டம் கண்டது அங்கு தான். தூத்துக்குடியிலுள்ள கயத்தாறில் 10 வார்டுகளைக் கைப்பற்றி அந்த ஒன்றியத்தைத் தனதாக்கி அமமுக ஷாக் கொடுத்தது. இவ்வளவு ஏன் கடம்பூர் ராஜூவின் சொந்த ஊரான சிதம்பராபுரம் அடங்கியுள்ள வார்டிலும் அமமுகவே வெற்றி பெற்றது. ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த மாணிக்கராஜாவின் செல்வாக்கே அதற்குக் காரணம்.

மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?

முக்குலத்தோர் சமுதாயத்தவரான மாணிக்கராஜா கோவில்பட்டியின் பெரிய தலைக்கட்டாக வலம் வருபவர். இவர் சொன்னால் போதும் டிடிவிக்கு முக்குலத்தோரின் 23% வாக்குகள் மளமளவென குவியும் என்ற நம்பிக்கை மூன்றாம் காரணம். தொகுதி மறுசீரமைப்பில் முக்குலத்தோர் கணிசமாக இருக்கும் கயத்தாறு தொகுதி கோவில்பட்டியில் இணைக்கப்பட்டு அவர்களின் வாக்கு சதவிகிதம் நாயக்கர்களை விட அதிகமானது. அந்த வாக்குகளைக் குறிவைத்து கோவில்பட்டியை டிடிவி குறிவைக்க நான்காவது காரணமாகிவிடுகிறது.

மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?

அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு ஹாட்ரிக்கா? முட்டுக்கட்டையா?

மேலே எதுவெல்லாம் டிடிவிக்கு பிளஸ்ஸாக இருந்ததோ அதுவெல்லாம் ராஜூவுக்கு மைனஸாக அமைவது கட்டாயமாகிவிடுகிறது. டிடிவியின் அறிவிப்பால் அமைச்சர் ராஜூ நிச்சயம் ஒரு நொடி ஆடி தான் போயிருப்பார் என்பதை எளிதில் யூகிக்க முடியும். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த தேர்தலில் வெறும் 400 வாக்கு வித்தியாசத்தில் தான் திமுகவின் சுப்பிரமணியனை தோற்கடித்திருந்தார். அந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக 28 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. இதே வாக்குகள் இந்தத் தேர்தலிலும் எதிரொலிக்கும். இது தினகரனுக்கு பிளஸ். ராஜூவுக்கு மைனஸ். சொல்லப் போனால் அங்கு மதிமுக அல்லது கம்யுனிஸ்ட் கட்சிகள் நின்றிருந்தால் சர்வநிச்சயமாக இப்போது கடம்பூர் ராஜூ அமைச்சராக இருந்திருக்க மாட்டார்.

மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?

இதற்கும் காரணம் இருக்கிறது. 2001ஆம் ஆண்டு வரை இந்திய கம்யுனிஸ்ட்டின் கோட்டையாக இருந்திருக்கிறது கோவில்பட்டி. ஏழு முறை வெற்றிவாகை சூடியிருக்கிறது. வைகோவுக்கும் தனிப்பட்ட முறையில் இங்கே செல்வாக்கு அதிகம். இந்தக் காரணங்களைக் குறி வைத்து தான் பக்காவாக மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டை திமுக களமிறக்கியிருக்கிறது. மார்க்சிஸ்ட்டும் இந்திய கம்யுனிஸ்டும் மற்ற நாட்களில் சட்டையைப் பிடித்துக்கொண்டாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் மாற்றான் பிரதர்ஸ்களாகப் பொளந்துவிடுவார்கள்.

மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?
சீனிவாசன்

விஷயம் அதுவல்ல. கோவில்பட்டியில் சம பலத்துடன் இருக்கும் இரு சாதிகளில் ஒன்று நாயக்கர். மற்றொன்று முக்குலத்தோர். முக்குலத்தோரான தினகரன் நிற்பதால் ஒட்டுமொத்த நாயக்கர் வாக்குகளும் தனக்கு விழும் என்ற கனவில் கடம்பூர் ராஜூ இருக்க முடியாது. மார்க்சிஸ்ட் அந்தக் கனவைச் சிதைத்து முக்கியமான ரோல் பிளே செய்கிறது. அக்கட்சி சார்பில் போட்டியிடும் சீனிவாசனும் நாயக்கர் தான். கம்யுனிஸ்ட்களுக்கென்று இருக்கும் பிரத்யேகமான வாக்குகள், கடம்பூர் ராஜூ மீது அதிருப்தியில் இருக்கும் நாயக்கர்களின் வாக்குகள் என அத்தனையும் அப்படியே கவர்ந்துவிடுவார். இது கடம்பூர் ராஜூவுக்கு மிகப்பெரிய மைனஸோ மைனஸ்.

மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?

X-Factor நாடார் சமுதாய வாக்குகள்

அனைத்து தொகுதிகளிலும் அவரவர் சமுதாயத்தினர் மட்டுமே வாக்களித்தால் ஜெயித்துவிடுவார்களா? இதர சமுதாயங்கள் தான் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக விளங்குகின்றன. கோவில்பட்டி மக்கள்தொகையில் 19 சதவீதத்தைக் கொண்டிருக்கும் நாடார் சமுதாயமாக இருக்கிறது. இந்த வாக்குகள் எந்தப் பக்கம் சாய்கிறதோ அந்தப் பக்கத்தின் கையே ஓங்கும். அவர்களில் சிலர் யாருமே வேண்டாம் என அடுத்த இடத்தில் இருக்கும் ‘நாடார்’ சமுதாயத்தவரான சீமானுக்கு குத்திவிட்டால் கோவில்பட்டி முடிவுகளில் அனல்பறக்கும். பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

கோவில்பட்டி மக்களின் தீர்ப்பும்… தினகரனின் கோட்டையாக மாறும் ஆச்சரியமும்!

கடம்பூர் ஜமீன் மாணிக்கராஜா போட்ட கணக்கு தப்பவில்லை. தினகரனை ஏன் இங்கு நிற்க கட்டாயப்படுத்தினார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே கருத்துக்கணிப்புகளில் தெரிகின்றன. நமது டாப் தமிழ் நியூஸ் செய்தியாளர்கள் கோவில்பட்டி மக்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில் பெருவாரியான மக்கள் டிடிவி பெயரையே உச்சரித்தனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் முறையே திமுகவும் அதிமுகவும் இருக்கின்றன.

மிஷன் ஆர்கே நகர் 2.0: டிடிவியின் கோட்டையாகிறதா கோவில்பட்டி?

சீமான், கமல்ஹாசன் எல்லாம் ஆட்டத்திலேயே இல்லை. கோவில்பட்டியில் மும்முனை போட்டியாகிருப்பது உறுதியாகியிருக்கிறது. தினகரன் தான் லீடிங்கில் இருக்கிறார். அமைச்சர் கடம்பூர் ராஜூ மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆர்கே நகர் சாதனை வெற்றிக்கு அடுத்து கோவில்பட்டியிலும் டிடிவி சாதனை படைப்பார் என்றே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆம், டிடிவி தினகரனின் கோட்டையாகிறது கோவில்பட்டி!!!