’அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றியா?’ வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேச்சு

’அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றியா?’ வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேச்சு

தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் களம் காணுகிறார். இருவரில் அதிபராவது யார் என்ற கேள்வியே உலகில் பல மூலைகளில் எதிரொலிக்கிறது.

இப்போதைய நிலைமைப்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 225 இடங்களிலும் தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் 213 இடங்களில் முன்னிலையில் உள்ளார்கள்.

’அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றியா?’ வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேச்சு

ஆனால், ஊடகங்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “டெக்ஸாஸ் மாகாண அதிபர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். 85 சதவிகித வாக்குகளோடு அங்கு வெற்றி பெற்றிருக்கிறோம்” என்றவர் மேலும், “இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அமெரிக்கர்களுக்கு நன்றி. தேர்தல் முடிந்தும் வாக்கு பதிவு நடத்துவது சரியல்ல” என்று கூறியுள்ளார். தேர்தல் நடத்தை குறித்து நீதிமன்றம் செல்லப்போவதாகவும் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

’அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றியா?’ வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேச்சு

இன்னும் தேர்தல் முடிவு முழுமையாக வெளிவராத சூழலில் ட்ரம்ப் பேச்சு அதிர்ச்சியை அளித்துள்ளது.