அமெரிக்காவில் மீண்டும் ட்ரம்ப் அதிபரா? – என்னதான் நடக்குது?

 

அமெரிக்காவில் மீண்டும் ட்ரம்ப் அதிபரா? – என்னதான் நடக்குது?

அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. அதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

வாக்கு எண்ணிக்கையில் இழுபறி ஏற்பட, ஒருவழியாக அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளைக் கடந்த ஜோ பைடன். இதன்மூலம் உலகில் உள்ள பல நாட்டுத் தலைவர்களும் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றன.

அமெரிக்காவில் மீண்டும் ட்ரம்ப் அதிபரா? – என்னதான் நடக்குது?

ஆனால், இன்னும் இந்தப் பிரச்னை முடியவில்லை என்றே சமீப தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்ததாக ஏராளமான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்திருந்தார் ட்ரம்ப். இந்நிலையில் தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களை உடனே விசாரிக்கும்படி அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஆணையிட்டுள்ளனர். அதுவும் தேர்தல் வெற்றி குறித்த அஃபிஷியலான அறிவிப்பு வெளிவரும் முன்பே விசாரிக்க வேண்டுமாம்.

அமெரிக்காவில் மீண்டும் ட்ரம்ப் அதிபரா? – என்னதான் நடக்குது?

ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவுகளில் ’நீதிக்காக போராடுகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார். பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் முறைகேடு நடந்ததாகவும அவற்றை சரி செய்துவிட்டால் தான் மீண்டும் அதிபராகி விடுவேன் என்பதாகவே சொல்லி வருகிறார்.

மீண்டும் ட்ரம்ப் அதிபரா என்ற கேள்வி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கான பதிலை அமெரிக்கா நீதிமன்றம்தான் அளிக்க வேண்டும்.