நாளை விராட் கோலிக்கு சாதனை நாளாக அமையுமா?

 

நாளை விராட் கோலிக்கு சாதனை நாளாக அமையுமா?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பரிதாபமாகத் தோற்றது. சேஸிங்தான் என்று தெரிந்தும் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினார்கள். பேட்ஸ்மேன்களில் ஒருவர்கூட வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்பு இருப்பதுபோலவே ஆட வில்லை என்பதே சோகம்.

இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோற்றலும், விராட் கோலி முக்கியமான சாதனையை நோக்கி நகர்ந்தார். இரண்டாம் போட்டியில் விராட் கோலி 89 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் 23 ரன்கள் அடித்து தனது கிரிக்கெட் பயணத்தில் முக்கியமான மைல் கல்லைக் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 89 ரன்களோடு ஆட்டமிழந்தார்.

நாளை விராட் கோலிக்கு சாதனை நாளாக அமையுமா?

அப்படியென்ன சாதனை என்கிறீர்களா? ஒருநாள் கிரிக்கெட்டில் 12000 ரன்கள் கடந்த வீரர்கள் மிகச் சிலரே. இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே அப்படிக் கடந்திருக்கிறார். அவரே ஒருநாள் போட்டியின் அதிக ரன்கள் எனும் சாதனையில் இருக்கிறார். அவர் அடித்த ரன்கள் 18,426. அவரை நெருங்கிக்கூட யாரும் இன்னும் வர வில்லை.

சச்சினுக்கு அடுத்தபடியாக இலங்கையின் குமார சங்ககார 14,234 ரன்களோடு இரண்டாம் இடத்தில், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 13,704 ரன்களோடு மூன்றாம் இடத்திலும், சனத் ஜெயசூர்யா 13,430 ரன்களோடு நான்காம் இடத்திலும், ஜெயவர்த்தனே 12,650 ரன்களோடு ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

நாளை விராட் கோலிக்கு சாதனை நாளாக அமையுமா?

11,977 ரன்களோடு விராட் கோலி ஏழாம் இடத்தில் இருக்கிறார். நாளைய போட்டியில் 23 ரன்களை அடித்தால், 12,000 ரன்களைக் கடக்கும் இரண்டாம் இந்திய வீரராவார். நாளை விராட் கோலிக்கு சாதனை படைக்கும் நாளாக மாறுமா என்பதே அவரின் ரசிகர்கள் இப்போதைக்கு இருக்கும் சஸ்பென்ஸ்.