’’ரேஷன் கடைகள் இல்லாமல் போகுமா? யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது’’- அமைச்சர் செல்லூர்ராஜு

 

’’ரேஷன் கடைகள் இல்லாமல் போகுமா? யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது’’- அமைச்சர் செல்லூர்ராஜு

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு இருவரும் இணைந்து, கடலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் வகையில் 16 ஏக்கரில் பல்வகையான 15000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைத்தனர்.

’’ரேஷன் கடைகள் இல்லாமல் போகுமா? யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது’’- அமைச்சர் செல்லூர்ராஜு

முதற்கட்டமாக 100 வகையான 1,200 மரக்கன்றுகளை அமைச்சர்கள் நட்டு வைத்து துவங்கிட, ஆட்சியரக அலுவலர்கள், பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அரசின் திட்டங்களை மக்களைச் சென்றடைய தேவையான நடவடிக்கைகளை அனைத்து அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளரிடம் பேசியபோது, ‘’கூட்டுறவுத்துறையின் திட்டங்களை செயல்படுத்துவதில் கடலூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடுத்து வரும் போது அதனை எடைப்போட்டு கடைக்காரர்கள் இறக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட எடையை விட குறைவாக இருந்தால் அப்பொருட்களை திருப்பி அனுப்பி விடலாம். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் துவங்குகிறது. இதற்காக ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கூடுதலாக சர்வர் வழங்கப்பட்டுள்ளது.

’’ரேஷன் கடைகள் இல்லாமல் போகுமா? யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது’’- அமைச்சர் செல்லூர்ராஜு

இதில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அட்டைதாரர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் வழங்குதல், ஆதார் அட்டையை காண்பித்து பொருள் வழங்குதல் ஆகிய முறைகள் கடைபிடிக்கப்படும். எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். புதிய வேளாண் திட்டத்தினால் ரேஷன் கடைகள் இல்லாமல் போகும் என்று கூறப்பட்டு வரும் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகத்தில் ரேஷன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் தொடர்ந்து இயங்கும்’’ என்றார்.