ரஜினியின் கட்சியில் குடும்ப அரசியல் இருக்குமா?

 

ரஜினியின் கட்சியில் குடும்ப அரசியல் இருக்குமா?

1995 ஆம் ஆண்டு ரஜினி காந்த் நடித்து வெளியான ‘பாட்ஷா’ படத்தின் வெற்றி விழாவில் தொடங்கிய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியிருக்கிறது. ஆமாம். பாட்ஷா பட விழாவில்தான் ஆளும் அதிமுகவை எதிர்த்து பேச, கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிலிருந்து உருவான ரஜினி அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு இன்று முக்கியமான கட்டத்திற்கு வந்தடைந்திருக்கிறது.

இன்று காலையில் ரஜினிகாந்த், ‘ஜனவரியில் கட்சித் தொடங்கவும், அது குறித்த அறிவிப்புகளை டிசம்பர் 31-ம் தேதியும் வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களைச் சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறது.

ரஜினியின் கட்சியில் குடும்ப அரசியல் இருக்குமா?

’சிஸ்டம் சரியில்லை’ என்பதே ரஜினியின் முதல் அரசியல் ஸ்டேட்மெண்ட் என்று கொள்ளலாம். அப்படி சிஸ்டம் சரிசெய்ய வருவதாகச் சொல்லும் ரஜினியின் கொள்கைகள் ஏதும் இதுவரை வெளிப்படையாகச் சொல்ல வில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசு பற்றி எதிர்மறையாக ஒரு வார்த்தையும் சொல்ல மறுக்கிறார். அப்படியெனில், தமிழகத்தை ஆளும் கட்சிகள் மட்டுமே அவரின் எதிர்ப்பு என்று புரிந்துகொள்ளலாம்.

அப்படியெனில், அவரின் சிஸ்டம் எனும் வரையறையில் ஊழல், குடும்ப அரசியல் இடம்பெற்றிருக்கும். இதில் ரஜினி தொடங்கும் கட்சியில் குடும்ப அரசியல் இருக்குமா என்பதைப் பார்ப்போம்.

ரஜினியின் கட்சியில் குடும்ப அரசியல் இருக்குமா?

ரஜினி நடித்த ’பாபா’ திரைப்படம் தயாரானபோதே அப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாபா டாலர், பாபா டீ சர்ட், பாபா மாலை உள்ளிட்டவை ரசிகர்களுக்கு விற்பனைக்கு தயராகி வந்த செய்திகளைப் பார்த்திருக்கிறோம். அதைத் தயாரிப்பதிலும் விற்பனையிலும் ரஜினியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இருந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின.

பாபா பட பொருள் விற்பனைக்கே அப்படியெனில், நாளை கட்சி, ஆட்சி, அதிகாரம் எனில், ரஜினியின் குடும்பத்தினர் தலையீடு இருக்காதா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசப்படும்போதெல்லாம், ரஜினியின் ரசிகர்களில் பெரும்பாலும் முதியவர்களாகி விட்டனர் என்று சிலர் விமர்சனம் செய்தனர். 1975 ஆம் ஆண்டு முதலே ரஜினி நடித்து வருகிறார். அவரின் புகழ் உச்சமாக இருந்த காலம் 85-2000 என்று வைத்துக்கொண்டால், அந்தக் காலக்கட்டத்தில் ரஜினியின் ரசிகர்களானவர்களுக்கு 50-60 வயதுள்ளவர்களாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அவர்கள் தங்கள் உழைப்பை, பணத்தை செலவிட்டு ரஜினி மன்ற வேலைகளைச் செய்திருப்பார்கள். அந்த உழைப்பு வீணாகக் கூடாது என்று அவர்களும் நினைப்பார்கள். ரஜினியும் நினைப்பார். ஏனெனில், அவர் ஒருமுறை ரசிகர்களைச் சந்தித்தபோது, ‘கடமையைச் செய்’ பலனை எதிர்பார்’ என்று பின்னணியில் எழுதியிருந்தார்.

ரஜினியின் கட்சியில் குடும்ப அரசியல் இருக்குமா?

எனவே, நீண்டகாலமாக தம் ரசிகர்களாக இருப்பவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க ரஜினி விரும்புவார். ஆனால், இளைஞர்களுக்கே அதிக வாய்ப்பு என்றும் பேசியிருக்கிறார் ரஜினி. இந்தச் சூழலில், தம் ரசிகர்களின் வாரிசுகளுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கும் முடிவை ரஜினி தரப்பில் எடுக்கக்கூடும். அப்படிப் பார்த்தாலும் அது வாரிசு அரசியல், குடும்ப அரசியல் எனும் வகையில்தானே வரும்.

இப்படி இன்னும் சில கேள்விகள் சுற்றிசுற்றி வருகின்றன. ஆயினும், குடும்ப அரசியல் குறித்து ரஜினியின் தரப்பாக ஏதும் சொல்லவில்லை. வருங்காலத்தில் இதுகுறித்த விளங்கங்கள் சொல்லப்படலாம்.