Home அரசியல் சசிகலா வெளியே வந்தவுடன் கட்சியில் மாற்றம் இருக்குமா? வைத்திலிங்கம் பேட்டி

சசிகலா வெளியே வந்தவுடன் கட்சியில் மாற்றம் இருக்குமா? வைத்திலிங்கம் பேட்டி

தஞ்சையில் அதிமுக மண்டல தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப பிரிவு கையேடு மற்றும் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். கூட்டத்தில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் வினோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அவர் அதிமுக அரசின் சாதனைகளை இளைஞர்கள் இணையதளம் மூலம் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் தேவையில்லாதவற்றை பதிவுசெய்து வருகின்றனர். ஆனால் ஒன்பது ஆண்டுகாலம் என்ன சாதனை செய்தோமோ அதனை எடுத்து சொல்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நாம் தேவையானவற்றை மட்டும் பதிவு செய்து தேவையில்லாதவற்றை தவிர்க்க வேண்டும் பேசினார்.

மேலும் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், கிசான் திட்டத்தில் முறைகேடு நடப்பதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

சசிகலா வெளியே வந்தவுடன் கட்சியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது எனவும், அவர் வெளியே வரட்டும் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பஞ்சாப் அரசு மறுக்கவில்லை… பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த ராகுல்

உத்தர பிரதேச அரசு போலல்லாமல், பஞ்சாப், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுகள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறுக்கவில்லை என பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

பணிவு குறித்து புரியாததால் அவர்கள் நான் மக்கள் முன் தலை வணங்குவதை மண்டியிடுவதாக கூறுகிறார்கள்.. சிவ்ராஜ்

பணிவு குறித்து புரியாததால் கமல் நாத்தும், திக்விஜய சிங்கும் நான் மக்கள் முன் தலை வணங்குவதை மண்டியிடுவதாக கூறுகிறார்கள் என்று சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

பா.ஜ.க.விலிருந்து பலர் வெளியேற விரும்புகின்றனர்…. ஏக்நாத் கட்சே தகவல்

பா.ஜ.க.விலிருந்து பலர் வெளியேற விரும்புகின்றனர் என அந்த கட்சியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஏக்நாத் கட்சே தெரிவித்தார். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக...

எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கபடாமலே 12க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக இருக்கின்றனர்… பா.ஜ.க.வை சாடிய பாகேல்

மத்திய பிரதேசத்தில்தான் நாட்டிலே முதல் முறையாக 12க்கும் மேற்பட்டவர்கள் தேர்தலை சந்திக்காமல் அமைச்சர்களாக உள்ளனர் என மத்திய பிரதேச பா.ஜ.க. அரசை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் குற்றம் சாட்டினார்.
Do NOT follow this link or you will be banned from the site!