குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுமா? – தமிழக அரசு விளக்கம்!

 

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுமா? – தமிழக அரசு விளக்கம்!

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய தினங்களில் எல்லா மாவட்டங்களிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தியின் போது கொரோனா அச்சுறுத்தலால் கிராம சபைக் கூட்டத்தை நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே போல உழைப்பாளர் தினத்தன்றும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை.

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுமா? – தமிழக அரசு விளக்கம்!

ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தடையை மீறி மு.க ஸ்டாலின் பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்டங்களை நடத்தினார். இந்த நிலையில், கிராம சபைக் கூட்டம் தொடர்பாக திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்துவது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு கிராம் சபை கூட்டம் நடைபெறுமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.