விலை குறைவாக இருக்குமா? – ரஷ்ய கொரோனா தடுப்பூசி

 

விலை குறைவாக இருக்குமா? – ரஷ்ய கொரோனா தடுப்பூசி

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கி உலக நாடுகள் சென்றுக்கொண்டிருக்கின்றன. ஏனெனில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 89 லட்சத்து 85 ஆயிரத்து 500 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 07 லட்சத்து 66 ஆயிரத்து 904 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 93 ஆயிரத்து 671 பேர்.

விலை குறைவாக இருக்குமா? – ரஷ்ய கொரோனா தடுப்பூசி

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியே உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டறிந்துவிட்டதாக அறிவித்து, பதிவு செய்தது. அம்மருந்தை முன்களப் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சியில் இருக்கிறது.

அமெரிக்காவில் மாடர்னா கம்பெனியின் தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் ரூ 1800 முதல் 2,775 வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அங்கு மிகத் தீவிரமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இந்திய மதிப்பில் ரூ 1500 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

விலை குறைவாக இருக்குமா? – ரஷ்ய கொரோனா தடுப்பூசி

இந்தச் சூழலில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பு மருந்தின் விலை அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டிருக்கும் மாடர்னா மற்றும் ஃபைசர் நிறுவனங்களின் தடுப்பூசி விலையை விட, இது குறைவாக நிர்ணயிக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.