பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுமா?..தேர்வுத்துறை சொல்லும் விளக்கம்!

 

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுமா?..தேர்வுத்துறை சொல்லும் விளக்கம்!

கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 10, 12 வகுப்புகளுக்கும், அடுத்தகட்டமாக 9,11 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தேர்வெழுதும் மாணவர்களின் சுமையை குறைக்க பாடத்திட்டங்களை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுமா?..தேர்வுத்துறை சொல்லும் விளக்கம்!

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ம் தேதி முதல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் 10,11ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறவிருப்பதால் அதற்கு மறுநாளே 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்த தேர்வுத்துறை திட்டமிட்டப்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுமென மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை கடிதம் எழுதியிருக்கிறது. அதில், வாக்கு எண்ணிக்கை கல்லூரிகளில் நடப்பதால் தேர்வுக்கு எந்த இடையூறும் இருக்காது என்றும் ஆசிரியர்களுக்கு பெருமளவில் வாக்கு எண்ணிக்கையில் பங்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.