‘தேர்தலுக்காக’ கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பா?

 

‘தேர்தலுக்காக’ கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பா?

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை என்றால் லாக்டவுன் போடவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.

‘தேர்தலுக்காக’ கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பா?

இதனிடையே, கொரோனா பாதிப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில், தேர்தல் நெருக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவுவதாக சொல்லப்படுவது ஏன்? தேர்தலை தடுத்து நிறுத்துவதற்காகவா? லாக் டவுன் அமல்படுத்தி பெட்டி மாற்றம் செய்வதற்காகவா? பாஜகவுடன் இணைந்து அதிமுக அரசு ஏதோ திட்டமிட்டிருக்கிறது என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, தேர்தலுக்காகத் தான் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

‘தேர்தலுக்காக’ கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பா?

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து காட்டப்படுவதாக வதந்தி பரப்புகிறார்கள். வதந்தி பரப்புவோர் வந்தால், கவச உடை அணிவித்து நோயாளிகளை காண்பிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், தேர்தல் நடைபெறாத மகாராஷ்டிரா, டெல்லியில் தொற்று அதிகரிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.