புதிய கல்விக்கொள்கை ஏற்கப்படுமா? – அமைச்சர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை! – 3ம் தேதி நடக்கிறது

புதிய கல்விக்கொள்கை ஏற்கப்படுமா? – அமைச்சர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை! – 3ம் தேதி நடக்கிறது

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வருகிற 3ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

புதிய கல்விக்கொள்கை ஏற்கப்படுமா? – அமைச்சர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை! – 3ம் தேதி நடக்கிறது
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள பல விஷயங்களுக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக மும்மொழி கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியுள்ளது.

புதிய கல்விக்கொள்கை ஏற்கப்படுமா? – அமைச்சர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை! – 3ம் தேதி நடக்கிறது
தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. வருகிற 3ம் தேதி தமிழக முதல்வருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்,

புதிய கல்விக்கொள்கை ஏற்கப்படுமா? – அமைச்சர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை! – 3ம் தேதி நடக்கிறது

கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையின் சாதகம், பாதகங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள அனைத்தையும் அப்படியே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதால், முழுமையாக விவாதித்த பிறகே அது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.