நவம்பரில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருமா?

 

நவம்பரில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருமா?


தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகிற நவம்பரில் தேர்தல் நடைபெற வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 7-8 மாதமே உள்ள நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

நவம்பரில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருமா?


ஆனால், தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற இடங்களுக்கான தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியது. நாடு முழுவதும் காலியாக உள்ள 65 சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களுக்கு பீகாருடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்துவது என்று விவாதிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளில் தேர்தல் நடத்துவது பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக சமீபத்தில் உயிரிழந்த ஜெ.அன்பழகனின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணிக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்துவது பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. இதனால், கன்னியாகுமரிக்கு தமிழக சட்டமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தொிகிறது.
குடியாத்தம், திருவொற்றியூருக்கும் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இது பற்றி தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த தேர்தல்களும் நடத்தும் முடிவும் கைவிடப் பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

நவம்பரில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருமா?

அதே நேரத்தில் கன்னியாகுமரிக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். சட்டமன்ற தேர்தல் வரை காத்திருக்கத் தேவையில்லை என்று தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. முன்கூட்டியே தேர்தல் நடந்தால் ஆட்சி அதிகாரம், செல்வாக்கை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதுவதால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போட்டு வருகிறது. எனவே, தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக இரண்டு தேசிய கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.