சுயேச்சையை மிரட்டி வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி… திருத்தணியில் தேர்தல் ஒத்திவைப்பு?

 

சுயேச்சையை மிரட்டி வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி… திருத்தணியில் தேர்தல் ஒத்திவைப்பு?

திருத்தணி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்தவர் என். அருண். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருத்தணி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கலின் இறுதிநாளன்று நெடுநேரம் காத்திருக்க செய்த பின்னரே தேர்தல் அலுவலர் என்னுடைய மனுவைப் பெற்றார். என்னை முன்மொழிந்த 10 பேரை தேர்தல் அலுவலரின் ஆட்களே மிரட்டி முன்மொழிவை திரும்ப பெறும்படி மிரட்டியுள்ளனர்.

Madras High Court - Wikipedia

பின்னர் வேட்பு மனு பரீலிக்கப்பட்ட பிறகு முன்மொழிந்தவர்களின் கையெழுத்து சரியாக இல்லை என மனு நிராகரிக்கப்பட்டது. எனவே என் வேட்புமனுவை புதிதாக 10 முன்மொழிபவர்கள் கையெழுத்துடன் புதிய வேட்புமனுவைப் பெற்று அதில் உரிய முடிவெடுக்கவும், அதுவரை திருத்தணி தொகுதி தேர்தலை ஒத்திவைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

சுயேச்சையை மிரட்டி வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி… திருத்தணியில் தேர்தல் ஒத்திவைப்பு?

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் நிரஞ்சன் ராஜகோபாலனும் ஆஜரானார்கள். வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேர்தல் வழக்காக மட்டுமே தொடர முடியுமென தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அருண் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.