” இ-பாஸ் ரத்து செய்யப்படுமா?” அமைச்சர் விஜயபாஸ்கர்

” இ-பாஸ் ரத்து செய்யப்படுமா?” அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நடைமுறைகளில் ஒன்றாக இபாஸ் முறை அமலில் உள்ளது. இ பாஸ் நடைமுறையில் பல தளர்வுகள் கொண்டு வந்தாலும் இதனை முழுமையாக நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இபாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது.

” இ-பாஸ் ரத்து செய்யப்படுமா?” அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சையை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது, “மத்திய அரசு அறிவித்தது போல இ-பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும்.

” இ-பாஸ் ரத்து செய்யப்படுமா?” அமைச்சர் விஜயபாஸ்கர்

முக கவசம் அணிவது, கொரோனா குறைவதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். 6,313 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.