திமுகவின் மக்கள் சபை கூட்டங்கள் தேர்தலில் வாக்குகளாக மாறுமா?

 

திமுகவின் மக்கள் சபை கூட்டங்கள் தேர்தலில் வாக்குகளாக மாறுமா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. அதிமுக – திமுக கூட்டணி இறுதிக் கட்ட பேச்சு வார்த்தையை நோக்கி நகர்ந்து வருகின்றன. இன்னும் ஐந்து மாதங்கள் தேர்தலுக்கு இருந்தாலும், முன்கூட்டியே பிரசாரத்தை இரு கூட்டணிகளும் தொடங்கி விட்டன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 23 முதல் ஜனவரி 10-ம் தேதி வரை கிராம சபை கூட்டங்களை திமுக நடத்தும். அதில் அந்த ஊர் மக்களின் குறைகள் பற்றி விவாதிக்கப்படும் என்பதாகக் கூறியிருந்தார். அதன்படி, கூட்டங்கள் தொடங்கின. அதற்கு திமுகவே எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டம் வந்தது என்றே சொல்ல வேண்டும்.

திமுகவின் மக்கள் சபை கூட்டங்கள் தேர்தலில் வாக்குகளாக மாறுமா?

திமுகவின் கிராம சபை கூட்டங்களின் போக்குகளைக் கணித்த தமிழ்நாடு அரசு கிராம சபை எனும் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்தது. அதனால், சோர்ந்துவிடாமல், மக்கள் சபை என்று பெயர் மாற்றி கூட்டங்களை நடத்தி வருகிறது திமுக.

இந்தக் கூட்டங்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓட்டுகளாக மாறுமா என்பதே இரு தரப்பும் கூர்ந்து கவனித்து வரும் விஷயம். அதைப் பற்றி பார்ப்போம்.

திமுகவின் மக்கள் சபை கூட்டங்கள் தேர்தலில் வாக்குகளாக மாறுமா?

திமுகவின் இந்தக் கூட்டம் மக்களிடையே ஏதேனும் ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதால்தான் தமிழ்நாடு அரசு பெயருக்குத் தடை விதிக்க முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. அதை சட்டரீதியாக எதிர்கொள்ள நீதிமன்றத்தை திமுக நாடும், அதனால் இந்தக் கூட்டங்களில் தொய்வு ஏற்படும் என்று எதிரணி தரப்பில் எதிர்பார்க்கபட்டது. ஆனால், பெயரை மாற்றி நடத்தப்பட்டது பலருக்கும் ஆச்சர்யமே.

பொதுவாக, சாலைகளில் பொதுக்கூட்டங்களில் மட்டுமே தலைவர்களைப் பார்த்து வந்த மக்களுக்கு ஊர் தேடி, கிராம பஞ்சாயத்துப் போன்ற அமைப்பில் தலைவர்களைப் பார்ப்பதும், உரையாடுவதும் ஒரு நெருக்கத்தை நிச்சயம் தரும். அது வாக்குகளில் ஒரு சதவிகிதத்தை உறுதி செய்யும்.

அதிமுக கட்சி கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்துவருகிறது. அதனால், அதன் மீது இயல்பாக எழும் அதிருப்தியை, இந்தக் கூட்டங்கள் வழியே வெளிப்படுத்த முடிகிறது என்பதும் கூடுதல் பலன். அது திமுக கூட்டணிக்கு பெரும் பலம்.

திமுகவின் மக்கள் சபை கூட்டங்கள் தேர்தலில் வாக்குகளாக மாறுமா?

திமுகவின் இந்தக் கூட்டங்கள் மற்ற கட்சியினர் மற்றும் பொதுமக்களின் வாக்குகளைப் பெற்றுத்தருகிறதோ இல்லையோ சோர்ந்துபோயிருக்கும் திமுக உறுப்பினர்களுக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது. அது தேர்தலில் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதில் ஒரு விஷயம் பலமாகவும் பலவீனமாகவும் கருதப்படுகிறது. திமுக இதைத் தனித்து நடத்துகிறது. கூட்டணி கட்சியையும் சேர்த்துகொள்வது பலம் என்று கூறப்பட்டாலும், இது திமுகவின் செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சி என்பதால், கூட்டணி கட்சிகளைச் சேர்த்தால் அது பலவீனமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியோ திமுகவின் மக்கள் சபை கூட்டங்கள் அந்தக் கூட்டணியில் தேர்தலுக்கு உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை எதிர்தரப்பு எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதைப் பொறுத்தே அதன் முழு பலன் கிட்டுமா என்பது தெரியும்.