ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுமா?

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுமா?

கொரோனாவின் தாக்கம் அதிகளவில் மார்ச் மாதம் முதல்தான் இந்தியாவில் தெரியத் தொடங்கியது. மத்திய அரசு ஊரடங்கு அறிவித்தது. இதனால், கொரோனா நோய்த் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்த நிலை இன்று வரை மாறவில்லை.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுமா?

கடந்த பத்தாண்டுகளாக கோடைக்காலத்தின் மாபெரும் கேளிக்கையாக ஐபிஎல் போட்டிகளே திகழ்கின்றன. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு தள்ளிக்கொண்டே சென்றது. இறுதியில் நோய்த் தொற்றின் வீச்சு அதிகமாக இருந்ததால் ஐபிஎல் போட்டிகள் கைவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் பல போட்டிகள் கைவிடப்பட்டன.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுமா?

இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுமா?

நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளும் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதை கிரிக்கெட் வாரியம் உணர்ந்துள்ளது. அதனால், ஒவ்வொரு வீரருக்கும் மூன்று முறை கொரோனா டெஸ்ட் எடுக்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கொரோனா டெஸ்ட் முடிவுகள் தெரியும்வரை சக வீரர்களைக்கூட சந்திக்க வாய்ப்பு மறுக்கப்படும். கொரோனா சோதனையில் நெகட்டிவ் வந்த வீரர்களே விளையாட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஒரு குறிப்பிட்டக் கால இடைவெளியில் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.