’கொரோனாவால் இறந்தவர்களுக்கு கண்ணியமாக இறுதிசடங்கு செய்ய மறுக்கப்படுவதா? ஜனாதிபதி வேதனை

 

’கொரோனாவால் இறந்தவர்களுக்கு கண்ணியமாக இறுதிசடங்கு செய்ய மறுக்கப்படுவதா? ஜனாதிபதி வேதனை

கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கின்றனர். அப்படி மரணம் அடைந்தவர்களின் உடலை அவர்களின் உறவினர்கள்கூட வாங்கத் தயக்கம் காட்டும் சம்பவங்கள் ஏராளம் நடக்கின்றன. தன்னார்வலர்களிடம் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அளிப்பது நடந்துவருகிறது. சில தொழிலாளர்கள் அந்த உடல்களை கையாளும் விதம் குறித்தும் விமர்சனம்  எழுந்தது.

’கொரோனாவால் இறந்தவர்களுக்கு கண்ணியமாக இறுதிசடங்கு செய்ய மறுக்கப்படுவதா? ஜனாதிபதி வேதனை

இது குறித்து இந்திய குடியரசுத் தலைவர் எம் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

‘’ தவறான எண்ணங்களை முறியடிப்பது தான் இப்போதைய அவசியத் தேவை. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில், இது தவறான  செய்திகள் மற்றும் தகவல்களை விட அதிக நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும். கோவிட்-19 நோயாளிகளை புரிதலுடனும், அனுதாபத்துடனும் ஒவ்வொருவரும் அணுக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், “யாருமே தற்போது  பாதுகாப்பாக இல்லை என்பதையும், கண்ணுக்குத் தெரியாத கிருமி யாரை வேண்டுமானாலும் பாதிக்கக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்”’ என்றும் கூறியுள்ளார்.

’கொரோனாவால் இறந்தவர்களுக்கு கண்ணியமாக இறுதிசடங்கு செய்ய மறுக்கப்படுவதா? ஜனாதிபதி வேதனை

மேலும் ”கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல் மக்கள் தடுக்கும் நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், இது முற்றிலும் ஏற்கத்தக்கத்தல்ல என்றும், உயிரிழப்பால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் குடும்பத்தினருக்கு பக்கபலமாக நிற்கும் இந்தியாவின் தொன்மையான பாரம்பரியத்துக்கு எதிரானது”  என்றும் கூறியுள்ளார்.

தொற்று மற்றும் அதன் பரவல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் மக்களுக்குக் கற்பித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்புப் பிரச்சாரங்களை சுகாதார அதிகாரிகளும், ஊடகங்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.