ரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுப்பா? – தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுப்பா? – தெற்கு ரயில்வே விளக்கம்

தமிழர்கள் நிராகரிக்கப்பட்டு வடமாநில இளைஞர்கள் நியமிக்கப்படுவதாக கூறுவது தவறு என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

உலகளவில் மிகப் பெரிய ரயில்வேக்களில் முதன்மையானது இந்திய ரயில்வே துறை . அதில் வேலைக்குச் சேர கடும்போட்டி நிலவவுவது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அத்தகைய ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

ரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுப்பா? – தெற்கு ரயில்வே விளக்கம்

இந்நிலையில் தெற்கு ரயில்வேயில் தமிழர்கள் நிராகரிக்கப்பட்டு வடமாநில இளைஞர்கள் நியமிக்கப்படுவதாக கூறுவது தவறு என்றும் பொது அறிவிப்பின் மூலமாகவே மண்டல ரயில்வே மற்றும் உற்பத்தி யூனிட்டுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எந்த மண்டல ரயில்வேக்கு ஒருவர் விண்ணப்பிக்கிறாரோ அதை பொறுத்தே அவருக்கு மண்டலம் ஒதுக்கப்படுகிறது என்றும் ரயில்வே விளக்கமளித்துள்ளது.