எஸ்.பி.வேலுமணியை கேள்வி கேட்கும் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்வாரா? – சீண்டும் கராத்தே தியாகராஜன்

 

எஸ்.பி.வேலுமணியை கேள்வி கேட்கும் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்வாரா? – சீண்டும் கராத்தே தியாகராஜன்

உள்ளாட்சித் துறை அமைச்சரை கேள்வி கேட்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் கே.என்.நேரு 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மேயராக ஸ்டாலின் இருந்தபோது செய்யப்பட்ட ஒரு நியமனம் தொடர்பாக விளக்கம் அளிக்க தயாரா என்று சென்னையின் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எஸ்.பி.வேலுமணியை கேள்வி கேட்கும் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்வாரா? – சீண்டும் கராத்தே தியாகராஜன்அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உள்ளாட்சித் துறையில் ஊழல் நடந்து வருவதாக தொடர்ந்து தி.மு.க தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு அமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். இரு தரப்புக்கும் இடையே அநாகரீக வார்த்தை பயன்பாடுகள் வேறு அதிகரித்து வருவது தமிழக அரசியலின் தரம் தாழ்ந்து வருவதை காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, தி.மு.க-வுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறிவரும் கராத்தே தியாகராஜன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியின் முதன்மைப் பொறியாளராக இருந்த புகழேந்தியை நகராட்சிகள் ஆணையத்தின் தலைமைப் பொறியாளராக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி எப்படி நியமித்தார்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த நியமனத்துக்குத் தமிழக அரசாணை பெறப்பட்டுள்ளது. ஆனால், இந்த நியமனத்துக்கு ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணை கேட்டுள்ளார்.

எஸ்.பி.வேலுமணியை கேள்வி கேட்கும் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்வாரா? – சீண்டும் கராத்தே தியாகராஜன்நான் ஸ்டாலினிடம் சில சந்தேக விளக்கத்தைக் கேட்க விரும்புகிறேன். ஸ்டாலின் மேயராக இருந்தபோது அவரது நெருங்கிய நண்பரான ராஜா சங்கர் என்பவரை (சிறப்பு உதவியாளர்) “மேயருக்கான சிறப்பு அதிகாரி – பாலங்கள்“ என்ற புதிய பதவியை உருவாக்கி நியமித்தார். அந்த நியமனத்திற்கு எந்த அரசாணையும் கிடையாது. ஸ்டாலின் தலைமையில் இரண்டு மன்ற உறுப்பினர்களுடன் இருந்த நியமன குழு மட்டுமே அதற்கு ஒப்புதல் வழங்கியது. ஆனால் ராஜா சங்கர் மாநகரத்தந்தைக்கு இணையான அந்தஸ்திலிருந்தார். டெண்டர் முதல் அனைத்து பணிகளுக்கும் மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் இவரிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்று சர்வ வல்லமையான பதவியை எப்படி வழங்கினார்கள். இதற்கு எந்த வகையான விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று ஸ்டாலின் சொன்னால் நல்லது” என்று கூறியுள்ளார்.