6 மாதத்துக்கு வட்டியை தள்ளுபடி செய்தால் ரூ.2 லட்சம் கோடி நஷ்டம்…. உச்ச நீதிமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

6 மாதத்துக்கு வட்டியை தள்ளுபடி செய்தால் ரூ.2 லட்சம் கோடி நஷ்டம்…. உச்ச நீதிமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டன, ஏராளமான பேர் வேலை இழந்தனர். வருவாய் இல்லாததால் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் தவணை தொகையை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி அவர்களுக்கு உதவும் வகையில் கடன் தொகையை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வரை மொத்தம் 6 மாதங்களுக்கு நீட்டித்தது. அதேசமயம் செலுத்தப்படாத தவணை தொகை வட்டியும் கடன் தொகையுடன் சேர்க்கப்படும்.

6 மாதத்துக்கு வட்டியை தள்ளுபடி செய்தால் ரூ.2 லட்சம் கோடி நஷ்டம்…. உச்ச நீதிமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

இந்த சூழ்நிலையில் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள 6 மாத கால அவகாசத்தில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பதில் அளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க இந்திய ரிசர்வ் வங்கி பதில் மனு தாக்கல் செய்தது.

6 மாதத்துக்கு வட்டியை தள்ளுபடி செய்தால் ரூ.2 லட்சம் கோடி நஷ்டம்…. உச்ச நீதிமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

அந்த மனுவில், கொரோனா வைரஸ் நெருக்கடியை கருத்தில் கொண்டு, வங்கிகளில் கடன் வாங்கிய அனைவருக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் கடனை திரும்ப செலுத்த ஆறு மாத அவகாசம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. கடனை திரும்ப செலுத்த அவகாசம் வழங்கப்பட்ட காலத்துக்கு வட்டியை தள்ளுபடி செய்தால் சுமார் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யக்கோரிய பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.