டிசம்பரில் மீண்டும் வெளியாகிறதா பப்ஜி விளையாட்டு ?

 

டிசம்பரில் மீண்டும் வெளியாகிறதா பப்ஜி விளையாட்டு ?

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு, மீண்டும் அறிமுகமாக உள்ளது. பப்ஜி விளையாட்டை அறிமுகம் செய்த, தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீனாவின் டென்செண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பப்ஜி விளையாட்டை வழங்கியது. பல்ஜி விளையாட்டு இளைஞர்களிடம் வன்முறையை ஊக்குவிக்கிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், சீனாவை சேர்ந்த செயலிகள், ஆன்லைன் விளையாட்டுகளை இந்தியா தடை செய்தபோது, பப்ஜி விளையாட்டுக்கும் தடை செய்யப்பட்டது.

டிசம்பரில் மீண்டும் வெளியாகிறதா பப்ஜி விளையாட்டு ?

இந்தியாவில் நிர்வாக தலைமை கொண்டு செயல்படும் நிறுவனங்கள் மட்டும் அனுமதிக்கப்படலாம் என்கிற நிலையில், பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் பப்ஜி இந்தியா லிமிடெட் என நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து , விரைவில் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. புதிதாக அறிமுகமாக உள்ள பப்ஜி விளையாட்டில், இந்திய தன்மைக்கு ஏற்ப பல வசதிகள் மேம்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. தடை செய்யப்படுவதற்கு முன்பு இருந்து விளையாட்டில் இருந்து, பல மாற்றங்கள் செய்யபட்டிருக்கும். மேம்பட்ட வசதிகள் எப்படி இருக்கும் என்பது வெளியிடப்படவில்லை என்றாலும், டிசம்பர் முதல் வாரத்தில் அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகிய்ள்ளன.

டிசம்பரில் மீண்டும் வெளியாகிறதா பப்ஜி விளையாட்டு ?

முதலில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் , அதன்பின்னர் ஐஓஎஸ் இயங்கு தளத்திலும் வெளியிடப்படலாம். அநேகமாக டிசம்பர் இறுதியில் அனைத்து இயங்குதளங்களிலும் பப்ஜி விளையாட்டு கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக அறிமுகமாக பப்ஜி விளையாட்டை, எப்படி விளையாடுவது என்பதற்கு பப்ஜி விளையாட்டிலேயே பயிற்சி களமும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இளைஞர்கள் முழுநேரமும் பப்ஜி வ்டை விளையாட முடியாத வகையில், நேரக் கட்டுப்பாடும் வசதிகளும் இருக்கும் என கூறப்படுகிறது. பப்ஜி விளையாடுவது நல்லதா? கெட்டதா என்பதைத் தாண்டி பப்ஜி ரசிகர்களுக்கு இது நல்ல செய்தியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.