எலியும் பூனையுமாக உள்ள நாடுகள் இவர் வருகையால் நட்பு பாராட்டுமா?

 

எலியும் பூனையுமாக உள்ள நாடுகள் இவர் வருகையால் நட்பு பாராட்டுமா?

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தாலே அது இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை ராணுவ மோதல் போல பார்க்கப்படும். அந்தளவு இரு நாடுகளிடையே பகைமை ஊட்டப்பட்டிருக்கிறது. இதேபோல உலகளவில் பெரிய நாடுகளில் பார்த்தோம் என்றால், ரஷ்யா – அமெரிக்காவைச் சொல்லலாம்.

இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தானிலிருந்து தீவிர வாதிகள் வருவதாக அதிகம் காட்டப்படுகிறதோ, அதேபோல அமெரிக்க திரைப்படங்களின் தீவிரவாதிகள் ரஷ்யாவிலிருந்து வருவதாக அநேக படங்கள் அமைந்திருக்கும்.

எலியும் பூனையுமாக உள்ள நாடுகள் இவர் வருகையால் நட்பு பாராட்டுமா?

இந்த முறை அமெரிக்கத் தேர்தலில் பைடன் மீது ட்ரம்ப் வைத்த குற்றச்சாட்டே ‘இவர் சீனா – ரஷ்யாவுக்கு ஆதரவான அள்’ என்பதே… அப்படித்தான் ரஷ்யாவை எதிரி நாடாகவே அங்குள்ள அரசியல்வாதிகள் கட்டமைத்திருக்கிறார்கள். இதே நிலைதான் ரஷ்யாவிலும். அமெரிக்கா ஏதேனும் ஒரு துறையில் சாதனை செய்தது என்றால், உடனே அதில் ரஷ்யாவும் பெயர் பதிக்க கடும் போராட்டத்தை முன்னெடுக்கும்.

இந்நிலையில் இந்தமுறை அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வென்றிருந்தார். சமீபத்தில் எலெக்ட்ரோல் காலேஜ் உறுப்பினர்களும் பைடனை அதிபராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தும் எடுத்து விட்டார்கள். அடுத்த மாத இறுதியில் அதிபராகப் பதவியேற்க இருக்கிறார் ஜோ பைடன்.

எலியும் பூனையுமாக உள்ள நாடுகள் இவர் வருகையால் நட்பு பாராட்டுமா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீடியாவைச் சந்திக்கையில், “ட்ரம்பை விட ஜோ பைடன் அரசியலில் அனுபவமும் நிதானமும் கொண்டவர். அதனால், ரஷ்யா – அமெரிக்கா இருநாடுகளின் உறவு ஆரோக்கியமாக நீடிக்க பைடன் உதவுவார்” என்று கூறியுள்ளார்.

பைடனின் ரஷ்ய அணுகுமுறை எவ்விதம் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.