திமுக கூட்டணிக்கு பாமக வரும் கதவுகளை அடைத்தவர்கள் யார்?

 

திமுக கூட்டணிக்கு பாமக வரும் கதவுகளை அடைத்தவர்கள் யார்?

தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. தேர்தல் கூட்டணிகள் ஓரளவுக்கு சேர்ந்ததுபோல இருந்தாலும், அதிலும் சில குழப்பங்கள் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் – இடதுசாரிகள் – விடுதலைச் சிறுத்தைகள் – மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே உள்ளன. அவை அப்படியே நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. வேல்முருகன் கட்சி போல ஓரிரு கட்சிகள் சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணிக்கு பாமக வரும் கதவுகளை அடைத்தவர்கள் யார்?

இதில், காங்கிரஸ் கட்சியில் சில மாற்றங்கள் தென்படுகின்றன. கமல்ஹாசன் கட்சியோடு கூட்டணி அமைக்கலாம் என்று சிலர் விரும்புவதுபோல தெரிகிறது. கமல்ஹாசன் குறித்து தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் பேசிக்கொண்டே இருக்கிறார். மறுபக்கம் ரஜினியின் வருகையால் ஏதேனும் மாற்றம் வருமா… அதிமுக கூட்டணி உடையுமா என்றும் காங்கிரஸ் பார்ப்பதுபோன்ற கணிப்புகள் வெளியாகின்றன.

திமுக கூட்டணிக்கு பாமக வரும் கதவுகளை அடைத்தவர்கள் யார்?

இன்னொரு பக்கம், திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதுபோல ஓரிரு மாதங்களுக்கு முன் பேசப்பட்டது. அன்புமணியின் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி மட்டுமே அவருக்குச் சிக்கலாக இருந்தது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்யலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது நடக்கும் சம்பவங்கள் திமுக கூட்டணிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இருப்பதையே காட்டுகின்றன.

முதலில் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தார் காடுவெட்டி குருவின் மகன் கனல். அப்போதே பாமக தரப்பில் வன்னியர் ஓட்டுகளைப் பிரிக்க இப்படியொரு ஏற்பாட்டைத் திமுக செய்வதாகப் பேசப்பட்டது. அதன்பின், தற்போது தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், காடுவெட்டிக்குச் சென்று குருவின் படத்திற்கு மாலை போட்டது பாமக தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக கூட்டணிக்கு பாமக வரும் கதவுகளை அடைத்தவர்கள் யார்?

அடுத்து, சமீபத்தில் திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் பாமக பற்றிய சர்ச்சையான கருத்தைக் கூறியிருந்தார். சென்ற சட்டமன்ற தேர்தலின்போது பாமக 400 கோடி வரை கூட்டணிக்காகப் பெற்றதாகவும், இம்முறை அதற்கு கொடுக்க பணம் இல்லை என்பதாகவும் தயாநிதி மாறன் பேசியிருந்தார். இது பாமகவின் கடும் அதிர்ச்சியை அளித்தது. தயாநிதி சென்ற வாகனத்தை இடைமறித்து பாமகவின் பிரச்சனை எல்லாம் செய்தார்கள்.

சூழல் இப்படியாக மாறிக்கொண்டிருக்கிறது. இன்னும் திரைமறையில் என்னவெல்லாமோ நடக்கலாம். அதனால், குருவுக்கு மாலை அணிவிப்பு, தயாநிதி மாறன் பேச்சு ஆகியவை திமுக கூட்டணிக்கு பாமக நுழையும் கதவுகளை அடைத்து விட்டது என்றே சொல்லலாம்.