டெஸ்ட்டில் தவறவிட்ட வெற்றியை டி20 யில் கைப்பற்றுமா பாகிஸ்தான்

 

டெஸ்ட்டில் தவறவிட்ட வெற்றியை டி20 யில் கைப்பற்றுமா பாகிஸ்தான்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. கொரோனா பரவி வரும் சூழலில், அதற்கான பரிசோதனைகள் ஒரு பக்கம், அயல்மண்ணில் ஆடும் ரிஸ்க் ஒரு பக்கம் என கடும் போராட்டத்தில் தள்ளாடுகிறது பாகிஸ்தான் அணி.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் அதிகநேரம் மழையே ஆடியதால் டிராவில் முடிந்தது.

டெஸ்ட்டில் தவறவிட்ட வெற்றியை டி20 யில் கைப்பற்றுமா பாகிஸ்தான்

மூன்றாம் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி அதிக ரன்கள் குவிக்க, அதை எடுக்க முடியாமல் ஃபாலோ ஆன் ஆனது பாகிஸ்தான் அணி. மீண்டும் பேட்டிங் பிடிக்கையில் தோல்வியைத் தவிர்க்க வெகு நிதானமாக ஆடினர் பாகிஸ்தான் அணியினர்.

மூன்றாம் போட்டியில் இடையேயும் கொஞ்சம் மழையும் வந்தது. அதனால், டிராவில் முடிவடைய இங்கிலாந்து அணி 1 : 0 எனும் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான முதலாம் 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 16.1 ஓவர்களில் 131 ரன்கள் குவித்தது. இதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆட்டம் தொடர்ந்திருந்தால் 150 – 160 ரன்களே எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

டெஸ்ட்டில் தவறவிட்ட வெற்றியை டி20 யில் கைப்பற்றுமா பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் பவுலர் ஷாடப் கான் டி20 போட்டிகளில் 50 வது விக்கெட்டை வீழ்த்தினார்.

அந்த ரன்களை பாகிஸ்தான் அணியினர் எடுக்கவும் முடிந்திருக்கலாம். ஏனெனில், பாபர் அஸாம் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார். கடந்த 5 டி20 போட்டிகளில் மூன்று போட்டிகளில் 66, 50, 59 ரன்களைக் குவித்திருந்தார்.

டெஸ்ட்டில் தவறவிட்ட வெற்றியை டி20 யில் கைப்பற்றுமா பாகிஸ்தான்

ஆனால், இடையில் மழை வந்ததால் ஆட்டம் 16.1 ஓவரோடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை இரண்டாம் டி20 போட்டியை எதிர்கொள்ள விருக்கின்றன பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள்.

அடுத்த இரண்டு டி20 போட்டிகளிலும் வென்று பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என அந்நாட்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.