ஓபிஎஸ் மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா? உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

ஓபிஎஸ் மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா? உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யகோரிய எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் இருந்து மக்களவைக்கு சென்றவர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் . இந்த தேர்தலில் ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரத்து 319 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஓபிஎஸ் மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா? உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் ‘ ஓட்டுக்காக எம்.பி. ரவீந்திரநாத் குமார் பணம் கொடுத்ததாகவும், தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா இங்கு அதிகம் நடைபெற்றதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். பணம் பட்டுவாடா அதிகம் புழக்கத்தில் இருந்த தேனி தொகுதியில் வேலூர் தொகுதியை போல தேர்தலை ஏன் தள்ளி வைக்கவில்லை என்றும் அவர் தனது மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஓபிஎஸ் மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா? உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம் எஸ் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதனிடையே தேர்தல் குறித்து தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு எம்.பி. ரவீந்திரநாத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. ஒருவேளை ரவீந்திரநாத் குமாரின் மனு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு எதிரான இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதுடன், அவர் பெற்ற வெற்றியும் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்படும். அவ்வாறு இல்லையென்றால் தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும்.