நடராஜன் டெஸ்ட்போட்டி பந்து வீச்சில் சாதிப்பரா? – ஆஸ்திரேலிய வீரரின் டவுட்

 

நடராஜன் டெஸ்ட்போட்டி பந்து வீச்சில் சாதிப்பரா? – ஆஸ்திரேலிய வீரரின் டவுட்

இந்தியா – ஆஸ்திரேலிய இரு அணிகளுக்கு இடையேயான இந்தத் தொடர் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சிப் படுத்தி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2:0 எனும் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்த, டி20 போட்டித் தொடரை 2:0 எனும் கணக்கில் இந்திய அணி வென்றது. இதில் தமிழகத்தின் நடராஜன் தனித்து வெளிப்பட்டார்.

தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டை ஆஸ்திரேலியாவும், இரண்டாம் டெஸ்ட்டை இந்தியாவும் வென்றிருக்கிறது. இரண்டாம் போட்டியில் தலைமையேற்ற ரஹானே அசத்தலான ஆட்டத்தையும் நேர்த்தியான கேப்டன்ஷிப்பை அளித்தார். அதுவே அந்தப் போட்டியில் வெல்ல உதவியது.

நடராஜன் டெஸ்ட்போட்டி பந்து வீச்சில் சாதிப்பரா? – ஆஸ்திரேலிய வீரரின் டவுட்

இந்த சீசனில் ஆட வேண்டிய சீனியர் பவுலர் இஷான் ஷர்மா உடல்நலப் பிரச்சனையால் பங்கேற்க முடியவில்லை. அதனால், முதல் டெஸ்ட் போட்டியிலேயே நடராஜனுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், சிராஜ், உமேஷ் யாதவ்க்கு மட்டுமே இடம் கிடைத்தது.

இந்நிலையில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின்போது பவுலர் உமேஷ் யாதவ்க்கு காயம்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். அந்தக் காயம் உடனடியாக சரி ஆகாத நிலையில் அவர் தொடரிலிருந்தே விலகுகிறார். அதனால், தமிழகத்தின் நடராஜன் மூன்றாம் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்கு முக்கியமான காரணம், நடராஜன் இடதுகை பவுலர் என்பதும்தான்.

நடராஜன் டெஸ்ட்போட்டி பந்து வீச்சில் சாதிப்பரா? – ஆஸ்திரேலிய வீரரின் டவுட்

ஆனால், ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேனும் சன்ரைஸர் ஹைதராபாத் டீமின் கேப்டனுமான டேவிட் வார்னர் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். ”ஒருநாள், டி20 போட்டிகள் அல்ல டெஸ்ட் போட்டிகள். தொடர்ந்து நிறைய பந்துகள் சரியான லென்த்தில் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்தடுத்த ஓவர்களில் பந்து வீச தயாராக இருக்க வேண்டும். நடராஜனால அப்படி வீச முடியுமா என்பது முழுமையாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் நடராஜன் நன்றாக வீசுவார், சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நடராஜனைக் கொண்டாடும் வெளிநாட்டு வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர். ஐபிஎல் போட்டிகளில் நடராஜனுக்கு நல்ல வாய்ப்புகளையும் அளித்தவர். அதனலாயே அவர் இந்திய அணியில் இடம்பிடிக்க முடிந்தது. இப்போதும் டேவிர் வார்னர் யதார்த்தமான தன் கணிப்பையே பகிர்ந்துகொண்டிருக்கிறார்.