ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?

 

ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?

ஐபிஎல் தொடர்களில் அடங்காத ஜல்லிக்கட்டு காளை என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான். யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பாய்ந்து முட்டித் தள்ளிவிடுவார்கள். இவர் விக்கெட்டை தூக்கிவிட்டோம் இனி ஜாலி தான் என்று எந்த அணி வீரர்களும் நிம்மதியாக இருந்துவிட முடியாது. எந்த இடத்தில் எத்தனை விக்கெட்டுகள் காலி ஆனாலும் அந்த இடத்தில் ரன் ரேட் குறையாமல் 20 ஓவர் வரை ஆட்டத்தைப் பரபரப்பாக எடுத்துச் செல்லும் அசகாய சூரர்கள் மும்பை கோட்டைக்குள் இருக்கின்றனர். அவ்வளவு எளிதில் யாரும் நெருங்கிவிட முடியாது.

ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?
ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?

முடிசூடா மன்னர்கள்

சென்னைக்கு அடுத்தபடியாக ஃபேன் பேஸ் அதிகமாக உள்ள டீம் மும்பை தான். ஆனால் களத்தில் மும்பைக்கு அடுத்த இடத்தில் தான் சென்னை. ரோஹித் சர்மாவின் அசத்தலான கேப்டன்ஷிப்பால் அந்த அணி தொடர்ந்து இருமுறை கோப்பையை வென்றிருக்கிறது. இம்முறை ஹாட்ரிக் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 5 கோப்பைகளைக் கைப்பற்றி ஐபிஎல்லின் முடிசூடா மன்னனாக வலம் வருகிறது மும்பை இந்தியன்ஸ். இம்முறை கோப்பையை வெல்ல முடியுமா? யாரெல்லாம் அணிக்குள் இருக்கிறார்கள்? உத்தேசமாக பிளேயிங்-11இல் இருப்பார்கள்? இம்மாதிரியான கேள்விகளுக்கு விடை காண்போம்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்? யார்?

ஏலத்தில் யாரும் செய்யாத சாதுர்யமான விஷயத்தை மும்பை அணி நிர்வாகம் கையாண்டது. கடந்த முறை ஏலத்தில் சிஎஸ்கேவுடன் கடும் போட்டி போட்டு நாதன் கோல்டர் நைலை 8 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் அவர் அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இம்முறை அவர் விடுவிக்கப்பட்டார். அவரை விடுவித்து குறைந்த தொகையில் ஏலம் எடுக்க வேண்டும் என்பதே மும்பையின் திட்டம். அதைச் சிறப்பாகக் கையாண்டு 5 கோடிக்கு மீண்டும் அவரை ஏலத்தில் எடுத்தது. இதனால் 3 கோடி லாபம்.

ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?

சாவ்லாவை தொக்காக தூக்கிய மும்பை

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் முக்கியவத்துவம் கொடுக்கும் அணியாக மும்பை இருக்கிறது. மலிங்கா சென்ற பின் போல்டை கொண்டுவந்தார்கள். பும்ரா-போல்ட் காம்போ பர்பெக்டாக செட் ஆக, மூன்றாவது ஆப்சனாக நைல் இருந்தார். அவர் கைகொடுக்கவில்லை. அதற்காகத் தான் இம்முறை அவரை அவர்கள் விடுவித்தார்கள். அவருக்குப் பதில் நியூஸிலாந்தின் ஆடம் மில்னேவை 3.20 கோடிக்கு எடுத்திருக்கிறார்கள். கடந்த முறை 6.75 கோடிக்கு சாவ்லா விலை போனார். இம்முறை சிஎஸ்கே விடுவிக்க மும்பை 2.40 கோடிக்கு தொக்காக தூக்கி கொண்டது.

ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?

இளம் வீரர்களுக்கு ஆர்வம் காட்டாத மும்பை

அதற்குப் பின் அவர்கள் டார்கெட் வைத்தது. ஃபாரின் கோட்டாவில் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டரும் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டரும். ஜிம்மி நீசத்தை 50 லட்சத்துக்கும் மார்கோ ஜென்செனை 20 லட்சத்துக்கும் எடுத்து வைத்துள்ளார்கள். இவர்கள் ஃபேக்அப் வீரர்களாகவே இருப்பார்கள். இளம் வீரர்களை இணங்கண்டு அவர்களைச் சிறந்த வீரராக மாற்றுவது மும்பைக்கு கைவந்த கலை.

ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?

பாண்டியா, பும்ரா ஆகியோர் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கு மும்பையும் ஒரு காரணம். ஆனால் இம்முறை அவர்கள் அந்த முயற்சியை எடுக்கவில்லை. மினி ஏலம் என்பதால் இம்முடிவை எடுத்திருக்கலாம். யுத்விர் சிங் என்ற பவுலரை 20 லட்சத்துக்கு வாங்கினார்கள் அவ்வளவே. டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை ஏன் எடுத்திருப்பார்கள் என்பது ஊருக்கே வெளிச்சம்.

தற்போது அணியில் இருக்கும் வீரர்கள்:

ரோஹித் சர்மா, குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ராகுல் சஹர், இஷான் கிஷான், பும்ரா, பொல்லார்டு, சூர்யகுமார் யாதவ், கிரிஸ் லின், டிரென்ட் போல்ட், ஜெயந்த் யாதவ், டி காக், சவுரப் திவாரி, கோல்டர் நைல், ஆடம் மில்னே, பியூஸ் சாவ்லா, நீசம், யுத்விர் சிங், மொசின் கான், ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், குல்கர்னி, அனுகுல் ராய், அர்ஜூன் டெண்டுல்கர்

ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?

மும்பையின் பலம்

முன்னதாகவே சொன்னது போல எந்த விக்கெட் போனாலும் அவர்களின் ரன்ரேட் மட்டும் குறையவே குறையாது. ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். ஓபனிங்கில் ரோஹித் சர்மா, டி காக் பொளந்தெடுத்தால், நடுவரிசையில் சூர்யகுமாரும் இஷான் கிஷானும் ருத்ர தாண்டவம் ஆடுவார்கள். இவர்கள் போய்விட்டால் பாண்டியாவும் பொல்லார்டும் பட்டாசாக வெடிப்பார்கள். கோல்டர் நைலும் குருணாலும் பொறுப்பான பேட்டிங் ஆடுவார்கள்.

ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?

தற்போது பேட்டிங் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீசம் இணைந்திருப்பது கூடுதல் பலம். எந்த அணியும் மும்பையின் பேட்டிங் ஆர்டரை ஒன்றும் செய்ய முடியாது. பவுலிங் டிபார்ட்மெண்டை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சில் பவர் ஃபிளேயில் போல்ட் அதிரிபுதிரியாக விக்கெட்டுகளைத் தூக்க டெத் ஓவர்களில் பும்ரா நிலைகுலைய வைத்துவிடுவார். இம்முறை ஹர்திக் பாண்டியா பவுலிங் போடுவது அவர்களுக்குக் கூடுதல் சாதகம். ஜிம்மி நீசம், கோல்டர் நைல், ஆடம் மில்னே என மூன்று ஆப்சன்களும் உள்ளன. எப்படி பார்த்தாலும் பவுலிங்கிலும் மும்பை பாஸ் ஆகி விடுகிறது.

ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?

மும்பையின் பலவீனம்

அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீப காலமாக ஃபார்மில் இல்லாமல் இருப்பது அந்த அணிக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மற்ற வீரர்களின் ஆட்டத்தால் இது பெரிதும் கண்டுகொள்ளப்படுவதில்லை. இருப்பினும் ஹாட்ரிக் அடிக்க ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்புவது அவசியமோ அவசியம். அடுத்ததாக ஸ்பின் டிபார்ட்மெண்டில் இன்னமும் திணறிவருவது மும்பை தான். மும்பையின் பெரும்பாலான ஆட்டங்கள் சேப்பாக்கத்தில் தான் நடைபெறவுள்ளது.

அந்த பிட்ச் ஸ்பின்னுக்குச் சாதகமானது. சாவ்லா எந்த அளவிற்கு கைகொடுப்பார் என்று தெரியவில்லை. ஏற்கெனவே இருக்கும் ராகுல் சஹர்-குருணால் காம்போ எடுபடவில்லை. ஜெயந்த் யாதவ்விடமும் பெரிய இம்பேக்ட் இல்லை. இதனால் இம்முறை ஸ்பின் பவுலிங்கால் முதல் பாதி தொடரில் மும்பை அடி வாங்கும் என்றே தோன்றுகிறது. கூடவே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரையும் மும்பை இன்னமும் தேடிக் கொண்டு தான் இருக்கிறது.

ஐபிஎல் முரட்டுக் காளை மும்பை ஹாட்ரிக் வெற்றி பெறுமா?… 6ஆவது முறையாக கோப்பையை முத்தமிடுமா?

ரோஹித்தின் பிளேயிங்-11இல் யார் இருப்பார்கள்?

ரோஹித்
டி காக்
சூர்யகுமார் யாதவ்
இஷான் கிஷான்
பொல்லார்டு
ஹர்திக்
குருணால்
கோல்டர் நைல்/ஆடம் மில்னே/ஜிம்மி நீசம்
ராகுல் சஹர்/சாவ்லா
பும்ரா
டிரென்ட் போல்ட்