Home இந்தியா ’நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவாரா மோடி? - ப.சிதம்பரம் கேள்வி

’நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவாரா மோடி? – ப.சிதம்பரம் கேள்வி

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வருகிறது. நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

இதனால் இருதரப்பிலும் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. நேற்று முதன்நாள் நடந்த ட்ரம்ப் Vs ஜோ பிடன் நேருக்கு விவாதம் 90 நிமிடங்களுக்கும் அதிகம் நீடித்தது.

”தான் அதிபரானால் காலநிலை மாற்றம் குறித்த முக்கியமான செயற்பாடாக பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை இணைப்பேன்”என்றார் ஜோ பிடன்.

ஜோ பிடனின் கருத்துக்குப் பதில் சொல்லும் விதமாக ட்ரம்ப், ‘புவி வெப்பமயமாதலுக்கு ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளும் காரணம்’ என்றார்.

“உலகளவில் அமெரிக்காவில்தான் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனாவைத் தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் ட்ரம்ப்தான்” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார் ஜோ பிடன்.

அதற்கு அதிபர் ட்ரம்ப் பதிலளிக்கும்போது, ”இந்தியாவிலும் மரணம் அதிகம். இந்தியா கொரோனா மரணங்கள் பற்றிய சரியான விவரங்களை அளிக்க வில்லை” என்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நல்ல நட்பில் இருப்பது தெரிந்த விஷயமே. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி மாதம் 24 -ம் தேதி ’நமஸ்தே ட்ரம்ப்’ எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடந்தது. அதில் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். 1 லட்சம் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தளவுக்கு நட்பு கொண்டிருந்த ட்ரம்ப், தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவைக் குற்றம் சொல்லியிருப்பது பலருக்கும் ஆச்சர்யமே.

இந்நிலையி முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது கொரோனா மரண எண்ணிக்கை மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு இந்தியாவே காரணம் என்று குற்றம் சாட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டி, மீண்டும் ஒருமுறை நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை நடத்துவாரா நரேந்திர மோடி? என்று கேட்டிருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை! அவருக்கு 6 நாட்களில் திருமணம்…

புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான மாத்தூரை சேர்ந்த பாலச்சந்தர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 36 வயதான பாலசந்தருக்கு இந்த மாதம்...

பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் முட்டைகள் இல்லை- அருங்காட்சிய காப்பாட்சியர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் போன்ற உருவம் குறித்த முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு...

மு.க.ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவபடிப்பில் அரசு பள்ளி...

பெண் ஆளுமைகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமை பணிகள்!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் இடமாற்றம் வழக்கமான ஒன்று தான் என்றாலும், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில...
Do NOT follow this link or you will be banned from the site!