LPL போட்டிகள் இலங்கையில் திட்டமிட்டப்படி நடக்குமா?

 

LPL போட்டிகள் இலங்கையில் திட்டமிட்டப்படி நடக்குமா?

இலங்கையில் எல்.பி.எல் எனும் பெயரில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டிகளைப் போலவேதான்.

இந்தத் தொடரில் ஆடுவதற்காக ஐந்து அணிகள் தயாராக இருக்கின்றன. அதில் வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். பஞ்சாப் டீம்க்காக ஆடி வரும் கிறிஸ் கெயில், ஐபில் முடிந்ததும் இலங்கைக்கு எல்.பி.எல் போட்டிகளில் ஆட செல்லவிருக்கிறார். அதேபோல சென்னையில் ஆடும் டூ பிளஸியும்.

LPL போட்டிகள் இலங்கையில் திட்டமிட்டப்படி நடக்குமா?

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் இது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 21-ம் தேதி எல்.பி.எல் போட்டி இலங்கையில் தொடங்குகிறது.

ஆனால், இத்தனை முறை எல்.பி.எல் போட்டி ஒத்தி வைக்க முக்கியக் காரணம், இலங்கையில் கொரோனா தொற்று பரவுகிறது என்பதால். மற்ற நாடுகளைப் பார்க்கையில் இலங்கை முன்னெச்சரிக்கையோடு கொரோனா பரவலைத் தடுத்திருக்கிறது என்றே சொல்லமுடியும்.

LPL போட்டிகள் இலங்கையில் திட்டமிட்டப்படி நடக்குமா?

இன்று காலை நிலவரப் படி, இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 6,287 பேர். இவர்களில் குணம் பெற்று வீடு திரும்பியோர் 3,644 பேர். சிகிச்சையில் இருப்போர் 2,629 பேர். சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 பேர்.

இலங்கையில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அக்டோபர் 6-ம் தேதி மட்டுமே 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர். இதுவே இலங்கையில் ஒரே நாளில் அதிகமளவில் அதிகரித்த எண்ணிக்கை. நேற்று மட்டுமே 309 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றில் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அதிக நோய்த் தொற்று ஏற்பட்ட இரண்டாம் நாள் நேற்று.

LPL போட்டிகள் இலங்கையில் திட்டமிட்டப்படி நடக்குமா?

இந்தச் சூழலில் எல்.பி.எல் போட்டிகள் திட்டமிட்டப்படி நவம்பர் 21-ம் தேதி தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அப்படியே நடத்தப்பட்டாலும், ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது சந்தேகமே! ஏனெனில், ஆயிரக்கணக்கில் ரசிகள் ஒரே இடத்தில் கூடுவது என்பது கொரோனா பரவலை அதிகரிக்கச் செய்துவிடும் அபாயம் இருக்கிறது. என்ன செய்யபோகிறது எல்.பி.எல் நிர்வாகம்?