எளிமையான அணுகுமுறைகளால் மக்களைக் கவரும் எடப்பாடி பழனிச்சாமி.!

 

எளிமையான அணுகுமுறைகளால் மக்களைக் கவரும் எடப்பாடி பழனிச்சாமி.!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முழு வேகத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அவரது பிரச்சார வியூகங்களும், பேச்சுக்களும் அக்மார்க் ’அம்மா ஸ்டைலை’ ஒத்திருப்பதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 19 ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள தனது சொந்த தொகுதியான இடைப்பாடியில் பர்சனலாக பிரச்சாரத்தைத் தொடங்கியதில் இருந்து, தினமும் பிரசார பயணத்தை வகுத்துள்ளார். முதல்வர் என்கிற பந்தா இல்லாமல் எளிமையாக பழகி வாக்கு சேகரிப்பது மக்களிடையே வரவேற்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளதாக தொண்டர்கள் கூறுகின்றனர்.

எளிமையான அணுகுமுறைகளால் மக்களைக் கவரும் எடப்பாடி பழனிச்சாமி.!

கடந்த 27 ஆம் தேதி சென்னையில். நடைபெற்ற அதிமுக அதிகாரப்பூர்வ பிரச்சார தொடக்க விழாவில் எடப்பாடி ஆற்றிய உரை எல்லோருடைய கவனங்களையும் ஈர்த்தது. ‘’ பெரும்பாலான கட்சிகள் வாரிசு இயக்கங்களாக இருக்க, அதிமுக மட்டும் தொண்டர்களின் கட்சியாக உள்ளது. சாதாரண தொண்டன் கூட இங்கு முதல்வராக முடியும். இதற்கு நானே உதாரணம் ‘’ என்கிற தொணியில் அவர் பேசியது தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

எளிமையான அணுகுமுறைகளால் மக்களைக் கவரும் எடப்பாடி பழனிச்சாமி.!

தமிழக அரசின் சரித்திர சாதனைகளை பட்டியலிடும் அவர், திமுக போன்ற எதிர்க் கட்சிகளின் பொய் பிரச்சாரங்களுக்கு சுடச்சுட பதிலடி தரவும் தவறுவதில்லை. ஐபேக் தயாரித்த அறிக்கையை வைத்துக் கொண்டு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை அவதூறு செய்வதாக பதிலடி அளித்து வருகிறார்.

எளிமையான அணுகுமுறைகளால் மக்களைக் கவரும் எடப்பாடி பழனிச்சாமி.!

‘’ அரசியலுக்கு வரும் முன்னர் துரைமுருகனுக்கு இருந்த சொத்துக்கள் எவ்வளவு? இன்றைய சொத்துக்களின் மதிப்பு என்ன? நான் எனது சொத்து விபரங்களை வெளியிடுகிறேன். இதேபோல துரைமுருகனும் வெளியிடத் தயாரா?’’ என எடப்பாடி எகிறி அடிக்க, எதிர்தரப்பு அப்படியே சைலண்டாகிவிட்டது. ’’தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என அவர் போட்ட போடு, முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சிகளை மூலையில் உட்கார வைத்துவிட்டன.

எளிமையான அணுகுமுறைகளால் மக்களைக் கவரும் எடப்பாடி பழனிச்சாமி.!

தனது பிரச்சார பயணத்தின் அடுத்தக்கட்டமாக நாமக்கல்லில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துவரும் எடப்பாடி. ஒரு தொண்டர் வீட்டுக்கு நேரில் சென்று டீ குடித்தபடியே பேசுவது வரவேற்பை பெற்றுள்ளது. இதே பாணியை தமிழகம் முழுவதும் பின்பற்ற உள்ளார். எடப்பாடியின் இந்த வேகமும், விறுவிறுப்பும் சொந்த கட்சி நிர்வாகிகளையே ரொம்பவே வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.

எளிமையான அணுகுமுறைகளால் மக்களைக் கவரும் எடப்பாடி பழனிச்சாமி.!

இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘’ அம்மா மறைந்தவுடன் கட்சியின் எதிர்காலமே சூனியமாகி விட்டது போலிருந்தது. குழப்படியான அந்த சூழலை தனது ஆளுமைத் திறனால் எதிர்கொண்டு, எல்லோரையும் அரவணைத்து இன்றைக்கு அதிமுகவை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருக்கிறார் எடப்பாடி. ஆற்றல் மிகுந்த நிர்வாகத் திறனால், அடுத்தடுத்து அள்ளிக் கொடுக்கப்படும் நலத்திட்டங்களால் பொதுமக்கள் மத்தியிலும் அவர் ஒரு ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். மாபெரும் மக்கள் தலைவராக மாறியிருக்கும் எடப்பாடிக்கு வரும் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கிடைக்கப்போவது உறுதி’’ என்கிறார்கள்.