டெல்லியின் ஹாட்ரிக் வெற்றியைத் தடுக்குமா ஹைதராபாத்? #IPL #DCvsSRH

 

டெல்லியின் ஹாட்ரிக் வெற்றியைத்  தடுக்குமா ஹைதராபாத்? #IPL #DCvsSRH

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பல கடைசி பந்து வரை சுவாரஸ்யமானதாக மாறி வருகிறது. நேற்று மும்பை இண்டியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியும் அப்படித்தான் ஆனது. இரு அணிகளும் 201 ரன்களை எடுக்க, சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி வென்றது.

இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

டெல்லியின் ஹாட்ரிக் வெற்றியைத்  தடுக்குமா ஹைதராபாத்? #IPL #DCvsSRH

டெல்லி அணியின் முதல் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப். இந்த ஐபிஎல் சீசனில் சூப்பர் ஓவர் வந்த முதல் போட்டி இதுவே. இதில் டெல்லியே வென்றது. மார்கஸ் ஸ்டொயினிஸ், ஸ்ரேயாஸ், ரிஷப் பந்த் ஆகியோர் பேட்டிங்கிலும், அஸ்வின், ரபாடா, ஸ்டொயினிஸ் ஆகியோர் பவுலிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

டெல்லியின் ஹாட்ரிக் வெற்றியைத்  தடுக்குமா ஹைதராபாத்? #IPL #DCvsSRH

டெல்லியின் இரண்டாம் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு. பேட்டிங்கில் ப்ரதிவ் ஷா, ரிஷப் பண்ட்,, ஷிகர் தவான் ஆகியோரும், பவுலிங்கில் ரபடா, நோர்ட்ஜே, அக்ஸர் படேல் ஆகியோரும் சிறந்த பங்களிப்பு செய்தனர். இதிலும் டெல்லியே வென்றது. தற்போது ஹாட்ரிக் வெற்றிக்காகக் காத்திருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரை எதிர்த்து ஆடியது. இதில் பத்து ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோற்றது ஹைதராபாத்.

டெல்லியின் ஹாட்ரிக் வெற்றியைத்  தடுக்குமா ஹைதராபாத்? #IPL #DCvsSRH

ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, ப்ரியம் கார்க் ஆகியோர் பேட்டிங்கிலும், விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, தங்கராசு நடராஜன் ஆகியோர் பவுலிங்கும் நல்ல பங்களிப்பு செய்தனர். ஆயினும் வெற்றியைத் தொட முடியவில்லை.

இரண்டாம் போட்டியில் பலம் வாய்ந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸை எதிர்கொண்டது. இதில் மணிஷ் பாண்டே (51), டேவிட் வார்னர் (30), சாஹா (30) ரன்கள் எடுத்தனர். ரஷித்கான், நடராஜன், கலீல் அகம்மது ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியிலும் ஹைதராபாத் அணிக்குத் தோல்வியே கிடைத்தது.

டெல்லியின் ஹாட்ரிக் வெற்றியைத்  தடுக்குமா ஹைதராபாத்? #IPL #DCvsSRH

இரண்டு வெற்றிகளோடு டெல்லியும் இரண்டு தோல்விகளோடு ஹைதராபாத் டீமும் இன்று மோதுகின்றன. இரு அணிகளில் டெல்லியே வலிமையானது என்றாலும், டெல்லி அணியில் அஸ்வின் இல்லாதது பின்னடைவே.

மூன்றாம் முறையாகத் தோல்வியைப் பெற்றுவிடக்கூடாது என்று ஹைதராபாத் நிச்சயம் கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும். அதனால், இன்றைய போட்டி நேற்றைப் போலவே விறுவிறுப்பாகவே இருக்கும்.