இங்கிலாந்தின் வெற்றி ஒருநாள் போட்டியிலும் தொடருமா? EngVsAus

 

இங்கிலாந்தின் வெற்றி ஒருநாள் போட்டியிலும் தொடருமா? EngVsAus

இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. டி20 போட்டிகள் மூன்றும், ஒருநாள் போட்டிகள் மூன்றும் ஆடுவதற்கான திட்டத்தில் உள்ளன.

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் 2 போட்டிகளை வென்று இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது. கடைசி மற்றும் மூன்றாம் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் வெற்றி ஒருநாள் போட்டியிலும் தொடருமா? EngVsAus

இரு அணிகளும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கி விட்டது. டாஸ் வின் பண்ணிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய சொல்லியுள்ளது.

நம்பிக்கையோடு களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் இறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் 6 ரன்களில் ஜப்ரா ஆர்க்சர் வீசிய பந்தில் அவுட் ஆனார்.

இங்கிலாந்தின் வெற்றி ஒருநாள் போட்டியிலும் தொடருமா? EngVsAus

அடுத்து அனியின் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகி ஆரோன் பின்ச் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க் வுட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி விட்டார். மூன்றாவதாக இறக்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 34 பந்துகளில் 43 ரன்கள் விளாசி ஆடிக்கொண்டிருந்தார். அவரும் பின்ச் போலவே மார்க் வுட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி விட்டார்.

இங்கிலாந்தின் வெற்றி ஒருநாள் போட்டியிலும் தொடருமா? EngVsAus

ஆஸ்திரேலிய அணி 23 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றிப்பெறும் என 68 சதவிகிதமும் 32 சதவிகிதம் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி என்று கணிக்கப்பட்டிருக்கிறது. போட்டியின் போக்கு மாற, மாற இந்தச் சதவிகிதமும் மாறக்கூடும்.