அழகிரி தனியே தேர்தலை எதிர்கொண்டால் திமுகவுக்கு இழப்பா?

 

அழகிரி தனியே தேர்தலை எதிர்கொண்டால் திமுகவுக்கு இழப்பா?

தமிழ்நாடு தேர்தல் களம் சூடு பறக்கத் தொடங்கி விட்டது. தேர்தல் மே மாதத்தில்தான். என்றாலும், திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளை தங்கள் கட்டுக்குள் வைக்கும் வேலையைத் தொடங்கி விட்டன. இரு கட்சிகளும் தேர்தல் பரப்புரை பணிகளை உற்சாகமாக ஆரம்பித்து விட்டன.

இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்குவது நின்றுபோனது. ஆனால், மறுபக்கம் மதுரை அழகிரி புதிய கட்சி தொடங்கும் முனைப்போடு கூட்டம் நடத்தி வருகிறார்.

அழகிரி தனியே தேர்தலை எதிர்கொண்டால் திமுகவுக்கு இழப்பா?

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி. கருணாநிதி இருக்கும்போதே தென்மண்ட பொறுப்பாளர் பதவி அழகிரிக்கு வழங்கப்பட்டது. அதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் எல்லாம் அழகிரி கைவசம் சென்றது. அவர் சொல்லும் நபர்தான் மாவட்ட செயலாளர், அவர் கைக்காட்டும் நபர்தான் அந்தப் பகுதி தேர்தல் வேட்பாளர்.

ஆனால், மு.க.ஸ்டாலின் – அழகிரிக்குமான பிரச்சனைகள் கட்சிக்குள் வெடிக்கத் தொடங்கியது. அதனால் 2014 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி. அதன்பின், அவரைக் கட்சிக்குள் கொண்டுவரும் பலவித முயற்சிகளைப் பலரும் மேற்கொண்டனர் எந்தப் பலனும் கிடைக்க வில்லை.

கருணாநிதி இறந்தபின்பு திமுக கட்சி முழுக்க மு.க.ஸ்டாலின் கைவசம் வந்தது. அவரின் மகன் உதயநிதிக்கு இளைஞரணி பொறுப்பு அளிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த அழகிரி அவ்வப்போது மீடியாவைச் சந்தித்து தம் உணர்வுகளைச் சொல்லி வருவார்.

அழகிரி தனியே தேர்தலை எதிர்கொண்டால் திமுகவுக்கு இழப்பா?

இப்போது உச்சகட்டமாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒருவேளை அழகிரி தனியாக தேர்தலைச் சந்திக்க முடிவு எடுத்தால் திமுகவுக்கு இழப்பு நேருமா என்பதே பலரின் கேள்வி.

தென்மாவட்டங்கள் முழுக்க அழகிரி வசம் இருந்தவை. எங்கே திமுக பலம், பலவீனம் என்பது அவருக்கு அத்துப்படி. களத்தில் இறங்கி வேலை செய்த அனுபவம் கொண்டவர். மேலும், மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெல்லும்படியான தொகுதிகளில் அழகிரி பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்கு பெரிய பாதிப்பை தரும்.

ஏனெனில், அழகிரி பெறும் வாக்குகள் அனைத்தும் திமுக ஆதரவு வாக்குகளே. அதிமுக, பாஜக வாக்குகள் அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், அழகிரியுடன் நெருங்கி இருந்த பலரும் அவரை விட்டு வெளியே வந்துவிட்டனர். அது அவருக்கு ஒரு பின்னடைவை தரும்.

அழகிரி தனியே தேர்தலை எதிர்கொண்டால் திமுகவுக்கு இழப்பா?

மேலும், அழகிரியை பாஜக பின்னிருந்து இயக்குவதாக ஒரு கருத்து பரவலாகப் பேசப்படுகிறது. ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் திமுக வாக்குகளைப் பிரித்திருப்பார். அவர் இல்லையென்றதும், தென் மாவட்டங்களில் அழகிரியை வைத்து பிரிக்க முயற்சி செய்யப்படுகிறதம். வட தமிழ்நாட்டில் பாமகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கும்பட்சத்தில் திமுக – பாமக போட்டி கடுமையாக இருக்கும். எனவே, திமுக வெல்லும் தொகுதிகளை கணிசமாகக் குறைக்க பாஜகவின் மாற்றுத் திட்டம் இதுவென்றும் சொல்லபடுகிறது.