Home விளையாட்டு கிரிக்கெட் தோனியின் வியூகம் சென்னைக்கு வெற்றி தருமா? #IPL CSKvsDC

தோனியின் வியூகம் சென்னைக்கு வெற்றி தருமா? #IPL CSKvsDC

ஐபிஎல் தொடரில், இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இரண்டாம் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

வலுவான அணியாக மதிப்பிடப்படும் டெல்லியை, தோல்விகளிலிருந்து மீண்டெழும் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதைக் காணவே பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எட்டுப் போட்டிகளில் ஆடி, ஆறில் வென்று இரண்டாம் இடத்திலுள்ளது. இன்றைக்கு வெற்றி கிடைத்தால் முதலிடத்திற்கு முன்னேறும்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல வேண்டும் எனில், இன்றைய வெற்றி மிகவும் அவசியம். ஏனெனில், எட்டுப் போட்டிகளில் ஆடிய சென்னை அணி, மூன்றில் மட்டுமே வென்று ஆறாம் இடத்தில் உள்ளது. இன்றைக்கும் நடக்கும் முதல் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்று விட்டால், சென்னை ஏழாம் இடத்துக்கு கீழே இறங்க வேண்டியிருக்கும்.

இந்த சீசனில் டெல்லியோடு சென்னை மோதும் இரண்டாம் போட்டி இது. முதல் போட்டியில் டாஸ் வென்ற தோனி, முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். பேட்டிங்கில் வலுவான டெல்லி முதலில் பேட்டிங் ஆடி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ப்ரத்திவ் ஷா, தவான், பண்ட், ஸ்ரேயாஸ் ஆகியோர் சீராக இந்த ரன்களை பங்கிட்டு எடுத்தனர்.

சென்னை அணியில் ரவிந்திர ஜடேஜா 4 ஓவர்களில் 44 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்த வில்லை. தீபக் சாஹரும் ரன்களை வாரிக்கொடுத்தார்.

அடுத்து பேட்டிங் ஆடிய சென்னை அணி வீரர்கள் டெல்லியின் பந்து வீச்சாளர்களின் அதிரடியில் சுருண்டார்கள். முரளி விஜய் 10, வாட்சன் 14, ருத்ராஜ் கெய்க்வாட் 5, கேதர் ஜாதவ் 26, தோனி 15, ஜடேஜா, 12 ரன்களில் ஆட்டமிழந்தார். டூ பிளஸி மட்டுமே 43 ரன்களை எடுத்தார். அணி 20 ஓவர்களில் 131 ரன்களுக்குள் சுருண்டது.

இன்றைய போட்டியில் டாஸ் வெல்வது வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமானதாக இருக்கும். தோனி வழக்கமாக சேஸிங் என்பதில்தான் குறியாக இருப்பார். அந்த முடிவை தற்போது மாற்றியிருக்கிறார். அதனால், இன்று தோனி டாஸ் வெல்லும்பட்சத்தில் முதலில் பேட்டிங் என்ற முடிவுக்கே செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

சென்ற முறை டெல்லி போட்டியில் சொதப்பிய, முரளி விஜய், கேதார் ஜாதவ், ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் இல்லாதது ஆறுதல். ஹைதராபாத்க்கு எதிரான போட்டியில் சாம் கரணை ஓப்பனிங் இறக்கியது தொடக்க ஓவர்களில் ரன்கள் அதிகரிக்க காரணமாக இருந்தது. அதை இன்றும் தோனி தொடர்வார் என்றே தெரிகிறது. டூ ப்ளஸியும் இன்று நிலைத்து ஆடினால் நல்ல ஓப்பனிங் கிடைக்கும்.

அதேபோல, வாட்ஸன் பார்முக்கு திரும்பியிருப்பதும் ராயுடு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது நல்ல விஷயம். கடைசி நேரத்தில் ஜடேஜாவின் அதிரடி இன்று தொடர வேண்டியது அவசியம். அநேகமாக, ஹைதராபாத் பேட்டிங் ஆர்டரை இன்றும் நீட்டிப்பார் தோனி என்றே கணிக்கப்படுகிறது.

அதேபோல ஏழு பவுலர்கள் எனும் நிலையில் களம் இறங்குவாரா என்பதே சந்தேகம். சென்ற போட்டியில் நல்ல பலனைக் கொடுத்தது என்பதால் தொடர்வார் என்று நம்பலாம். இல்லை ஒரு பவுலருக்கு ஓய்வளித்து ஜெகதீஷனை இறக்குவரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு ஆட்டத்திற்கும் மாற்றம் செய்துவரும் தோனியின் வியூகம் என்னவாக இருக்கும்… அது வெற்றியைத் தேடி தருமா என்பதற்கு பதில் இன்னும் சில மணிநேரத்தில் விடை தெரிந்துவிடும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...

கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு!

தர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!

தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...
Do NOT follow this link or you will be banned from the site!