கொரோனா தாக்கம் அமெரிக்க தேர்தலில் இருக்கா? இரு மாகாண நிலவரம்!

 

கொரோனா தாக்கம் அமெரிக்க தேர்தலில் இருக்கா? இரு மாகாண நிலவரம்!

அமெரிக்க தேர்தலின் முடிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. தொடக்கத்தில் ஜோ பைடன் பெருவாரியாக முன்னிலை சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென்ற ஏற்பட்ட மாற்றத்தால், ட்ரம்ப் மேலெழுந்து வந்திருக்கிறார்.

தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் களம் காணுகிறார். இருவரில் அதிபராவது யார் என்ற கேள்வியே உலகில் பல மூலைகளில் எதிரொலிக்கிறது.

கொரோனா தாக்கம் அமெரிக்க தேர்தலில் இருக்கா? இரு மாகாண நிலவரம்!

இப்போதைய நிலைமைப்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 225 இடங்களிலும் தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் 213 இடங்களில் முன்னிலையில் உள்ளார்கள்.

இந்தத் தேர்தலில் கொரோனா வைரஸ் பரவலை, ட்ரம்ப் கட்டுப்படுத்த தவறியது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கணித்தார்கள். அப்படித்தான் தேர்தல் முடிவுகள் செல்கின்றனவா என்று பார்ப்போம்.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில்தான் கொரோனா தொற்று அதிகம். இன்றைய தேதியில் 9,77, 686 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்கள்ல் 18,754 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா தாக்கம் அமெரிக்க தேர்தலில் இருக்கா? இரு மாகாண நிலவரம்!

அந்த மாகாண தேர்தல் நிலவரம், 83 சதவிதம் வாக்கு எண்ணிக்கை முடிவில் 52.2 சதவிகித வாக்குகள் பெற்று ட்ரம்பே முன்னிலை வகிக்கிறார். ஜோ பைடனுக்கு 46.4 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. இன்னும் 17 சதவிகிதம் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் முடிவில் மாற்றம் வரலாம்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் இரண்டாம் மாகாணம், கலிஃபோர்னியா. அங்கே 9,47,404 பேர் பாதிக்கப்பட்டு, 17,752 பேர் இறந்தனர். அங்குள்ள தேர்தல் நிலவரத்தைப் பார்ப்போம்.

கலிபோரினியாவில் ஜோபைடன் 66.1 சதவிகித வாக்குகளோடு முன்னிலை வகிக்கிறார். ட்ரம்ப் இங்கே 32.1 சதவிகித வாக்குகளே பெற்றிருக்கிறார். ஆனால், இங்கே 64 சதவிகித வாக்குகளே எண்ணப்பட்டிருக்கின்றன. இருந்தபோது இருவருக்கும் வாக்கு வித்தியாசம் அதிகம் என்பதால், ஜோ பைடன் வெல்லவே வாய்ப்பிருக்கிறது.

கொரோனா இந்தத் தேர்தலில் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்றாலும், தலைகீழாகப் புரட்டுப்போடும் காரணியாக அது மாறவில்லை என்றே தோன்றுகிறது.