இன்றைய போட்டியில் சென்னை வெல்லுமா? இது ISL திருவிழா

 

இன்றைய போட்டியில் சென்னை வெல்லுமா? இது ISL திருவிழா

கால்பந்து ரசிகர்கள் தினமும் உற்சாகமாக ISL கால்பந்து திருவிழா போட்டிகளை ரசித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்போடு சென்றுகொண்டிருக்கின்றன.

இன்றைய போட்டியில் மும்பை சிட்டி அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. இன்று சென்னை வெல்ல வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இன்றைய போட்டியில் சென்னை வெல்லுமா? இது ISL திருவிழா

மும்பை சிட்டி அணி இதுவரை 4 போட்டிகளில் விலையாண்டு, 3 போட்டிகளில் வென்று ஒன்றில் தோற்று 9 புள்ளிகளோடு பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தில் உள்ளது.

ஆனால், சென்னை அணியோ, 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது. இன்னொரு போட்டியில் தோற்றும், மற்றொரு போட்டியில் டிராவாகி உள்ளது சென்னை. இதனால், 4 புள்ளிகளோடு 8 இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் சென்னை வெல்லுமா? இது ISL திருவிழா

11 அணிகளே உள்ள பட்டியலில் 8-ம் இடம் என்பது மிகவும் கீழே இருப்பதாகும். அதனால், இன்றைய போட்டியில் சென்னை அணி வென்றால் 4 அல்லது 5-ம் இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்பிருக்கிறது.