பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. அங்கு ஆளும் திருணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இடதுசாரிகள் தலைமையில் மூன்றாம் அணி உருவாகிவந்தாலும் ரியல் போட்டி இவர்கள் இருவருக்கும் தான். ஜென்ம பகையாளிகளாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர். மற்ற மாநிலங்களில் செய்ததைப் போலவே மேற்கு வங்கத்திலும் தனது சித்து விளையாட்டுகளைத் தொடங்கியது.

பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!
பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

திருணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து, பாஜகவில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கின்றனர். இதற்குப் பாஜகவின் திருவிளையாடல் என்று கூறப்பட்டாலும் மம்தாவுக்கு தேர்தல் ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் தான் மெயின் காரணம் என்று தகவல் வெளியாகியது. மம்தா கட்சி நடவடிக்கைகளில் பிரசாந்த் கிஷோருக்கு கட்டற்ற சுதந்திரம் கொடுத்து சீனியர் தலைவர்களை ஓரங்கட்டுகிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றன. இதுதொடர்பாகவும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர் விரிவாகப் பேசியிருக்கிறார்.

திருணாமுல் தலைவர்கள் ராஜினாமா செய்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “நான் ஒரு கட்சிக்குத் தேர்தல் பணியாற்றவே நுழைந்திருக்கிறேன். மாறாக நண்பர்களை உருவாக்கிக் கொள்வதற்காக அல்ல. நான் வேலை பார்க்கும் கட்சி வெற்றிபெற வேண்டும். அது தான் என் தலையாயக் கொள்கை. அதற்காக நான் சில வேலைகளைச் செய்யும்போது, கட்சியிலிருக்கும் சிலர் ஓரங்கட்டப்படுவதாக அவர்களாகவே கற்பனை செய்துகொள்கிறார்கள். அவர்கள் வெளியேறுவது கூட ஒருவகை மறுசீரமைப்பு தான்” என்றார்.

பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

அதேபோல மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கும் உங்களுக்கும் கட்டற்ற சுதந்திரத்தை மம்தா கொடுத்திருப்பதாக எழுந்த புகார் குறித்துப் பேசிய அவர், “மம்தா பானர்ஜி கட்சியில் ஆக்டிவாகச் செயல்படும் வரை நானோ அல்லது யாரோ கட்சியைக் கட்டுப்படுத்த முடியாது” என நெத்தியில் அடித்தாற்போல் கூறினார். அடுத்தபடியாக பாஜக பக்கமும் அமித் ஷா பக்கமும் அவர் பேச்சு திரும்பியது. அப்போது கூறிய அவர், “பாஜக தலைவர்களும் அமித் ஷாவும் 200 இடங்களில் வெற்றிபெறுவோம் என சூளுரைக்கிறார்கள்.

பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

இவ்வாறு பொய்யாகக் கட்டமைக்கும் பிம்பத்தால் திருணாமுல் கட்சியினரிடையே ஒருவித நெருக்கடியையும் பயத்தையும் உண்டாக்க முனைகிறார்கள். பொய் பிம்பத்தையும் கூச்சலையும் மட்டுமே கொண்டு தேர்தலில் அவர்களால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாது. மோடி கலந்துகொள்ளும் பேரணிகளில் மட்டுமே அதிகப்படியான மக்களும் கலந்துகொள்கின்றனர். மற்ற தலைவர்களின் கூட்டத்தில் 200 பேரைத் தாண்டுவதே அதிசயம் தான். ஒருவேளை 100 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றுவிட்டால் நான் தேர்தல் வியூகங்கள் வகுக்கும் வேலையிலிருந்தே விலகுகிறேன்.

பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

ஐபேக்கை விட்டும் விலகி வேறு வேலையைச் செய்ய சென்றுவிடுவேன். நான் என் வார்த்தையில் பின்வாங்கப் போவதில்லை. அப்படி பாஜக வெற்றிபெற்றால் அரசியலுக்குள்ளேயே என்னை உங்களால் பார்க்கவே முடியாது. திருணாமுல் காங்கிரஸுக்குள் கலகத்தை ஏற்படுத்தினால் மட்டுமே பாஜகவால் வெற்றிபெற முடியும். ஆனால் அது அவர்களால் முடியாது” என கெத்தாகப் பேசியுள்ளார்.