பெங்களூருக்கு இரண்டாவது வெற்றி கிடைக்குமா? #IPL #RCBvsKXIP

பெங்களூருக்கு இரண்டாவது வெற்றி கிடைக்குமா? #IPL #RCBvsKXIP

ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொன்றுமே கடைசி ஓவர் வரை… சில போட்டிகள் கடைசி பந்து வரையே பரபரப்பாகவே செல்கிறது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸைப் பந்தாடியது ரோஹித் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ்.

இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை வென்ற பெங்களூரு அடுத்த வெற்றிக்காகக் களம் இறங்குகிறது.

பெங்களூருக்கு இரண்டாவது வெற்றி கிடைக்குமா? #IPL #RCBvsKXIP

ஆனால், பஞ்சாப் அணியோ டெல்லியிடம் கிடைத்த வெற்றியும் அம்பெயர் குளறுபடியால் பறிகொடுத்து, தோல்வியைத் தழுவியது. அதனால் இன்றைய போட்டியைப் பெரிதும் நம்பியிருக்கிறது.

பெங்களூருக்கு இரண்டாவது வெற்றி கிடைக்குமா? #IPL #RCBvsKXIP

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் செம ஸ்டாராங்காக இருக்கிறது. சென்ற போட்டியில் டி வில்லியர்ஸ் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தது நினைவுக்கு வருகிறது. அறிமுகப் போட்டியிலேயே அரை சதம் அடித்த தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச், விராட் கோலி, ஷிவம் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை இருக்கிறது.

பெங்களூருக்கு இரண்டாவது வெற்றி கிடைக்குமா? #IPL #RCBvsKXIP

பவுலிங் தரப்பில் மேஜிக் செய்ய சாஹல் தயாராக இருக்கிறார். சென்ற போட்டியில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைத் தூக்கினார். நவ்தீப், ஷிவம், உமேஷ் யாதவ் என பவுலிங் படை இருக்கிறது.

பெங்களூருக்கு இரண்டாவது வெற்றி கிடைக்குமா? #IPL #RCBvsKXIP

கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீமும் இதற்கு சளைத்து அல்ல. டெல்லிக்கு எதிரான போட்டியில் ஒற்றை ஆளாய் அணியை நிமிட வைத்தவர் மயங் அகர்வால். 7 ஃபோர், 2 சிக்ஸர் என 89 ரன்கள் குவித்ததார். கே.எல். ராகுலும் பூரனும் செட்டில் ஆக டைம் எடுக்கிறார்கள். மேக்ஸ்வெல் சுத்தமாக ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அவர் மீண்டு வர வேண்டும். கருண் நாயர் இன்றைக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.

பெங்களூருக்கு இரண்டாவது வெற்றி கிடைக்குமா? #IPL #RCBvsKXIP

இன்றைக்கு கிறிஸ் கெயில் களம் இறங்குவார் என்று தெரிகிறது. அவரும் வந்துவிட்டால் பஞ்சாப் டீமி பலம் பல மடங்கு பெருகிவிடும். கெயிலின் அதிரடி ஆட்டம், மயங் அகர்வாலின் நிதான ஆட்டம் அணியைக் காப்பாற்றக்கூடும்.

பெங்களூருக்கு இரண்டாவது வெற்றி கிடைக்குமா? #IPL #RCBvsKXIP

பவுலிங் ஷமி நல்ல ஃபார்மில் இருக்கிறார். டெல்லிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிறிஸ் ஜோர்டன், கிருஷ்ணப்பா கெளதம் ஆகியோர் ரன்களை வாரிக்கொடுப்பதைக் கட்டுப்படுத்தினால் நல்லது. ஷெல்டோன், ரவி பிஷ்னாய் ஆகியோரின் பந்து வீச்சு எடுபடக் கூடும்.